மாம்பழ லஸ்ஸி…

by Lifestyle Editor

மாம்பழம் பாதாம் லஸ்ஸி :

ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கப் தோல் சீவிய மாம்பழம் துண்டுகள் மற்றும் 10 முதல் 15 ஊறவைத்த பாதாம் ஆகியவற்றை சேர்க்கவும். இதனோடு 2 கப் தயிர், தேன் மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைக்க லஸ்ஸி தயாராகிவிடும்.

மாம்பழம் மஞ்சள் லஸ்ஸி :

இதனை செய்வதற்கு ஒரு கிண்ணம் தோல் சீவிய மாம்பழ துண்டுகள், 2 கப் தயிர், தேன் மற்றும் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் ஆகியவற்றை அரைத்து பரிமாறவும்.

மாம்பழம் புதினா லஸ்ஸி :

ஒரு கப் தோல் சீவிய மாம்பழ துண்டுகளோடு 2 கப் தயிர், 4 முதல் 6 புதினா இலைகள், தேன் மற்றும் சிறிதளவு ஐஸ் சேர்த்து அரைத்து பருகவும்.

மாம்பழம் தேங்காய் லஸ்ஸி :

இதனை செய்வதற்கு 2 கப் தேங்காய் பால் தயிர், 1 கப் தோல் சீவிய மாம்பழத் துண்டுகள் மற்றும் தேங்காய் கிரீம் உடன் சேர்த்து சிறிதளவு மேபிள் சிரப்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்து மகிழ்ச்சியாக பருகலாம்.

மாம்பழ சியா விதைகள் லஸ்ஸி :

2 டீஸ்பூன் ஊறவைத்த சியா விதைகளை 1 கப் தோல் சீவிய மாம்பழ துண்டுகள், 2 கப் தயிர், தேன் மற்றும் ஐஸுடன் சேர்த்து அரைத்தால் நமக்கு மாம்பழச் சியா விதைகள் லஸ்ஸி தயார்.

மாம்பழ வால்நட் லஸ்ஸி :

5 முதல் 8 ஊறவைத்த வால்நட் பருப்புகள், 1 கப் தோல் சீவிய மாம்பழ துண்டுகள், 2 கப் தயிர், தேன் மற்றும் பட்டை தூள் ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்கவும்.

மாம்பழ ஸ்ட்ராபெர்ரி லஸ்ஸி :

2 முதல் 5 ஸ்ட்ராபெர்ரி பழங்களை 1 கப் தோல் சீவிய மாம்பழ துண்டுகள், 2 கப் தயிர், தேன் மற்றும் ஐஸுடன் அரைத்து மகிழ்ச்சியாக குடிக்கலாம்.

Related Posts

Leave a Comment