தர்பூசணி மில்க்‌ஷேக்…

by Lifestyle Editor

தேவையான பொருட்கள்:

தர்பூசணி – அரை பழம்

பால் – அரை லிட்டர்

சர்க்கரை – தேவையான அளவு

பாதாம் பிசின் – 2 ஸ்பூன்

சப்ஜா விதை – 1 ஸ்பூன்

செய்முறை:

முதலில் அரை தர்பூசணி பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் இரண்டு ஸ்பூன் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் அரைத்த தர்பூசணி ஜூஸை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். அதனுடன் அரை லிட்டர் காய்ச்சி ஆற வைத்த பால் ரெண்டு ஸ்பூன் பாதாம் பிசின் ஒரு ஸ்பூன் சப்ஜா விதைகள் சேர்த்து நன்கு கலக்கவும்.

பின்பு அதனை அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து குடித்தால் குளு குளுவென வெயிலுக்கு இதமான தர்பூசணி மில்க் ஷேக் தயார். இது போன்ற ஜூஸ்களை வீட்டிலேயே தயார் செய்து குடித்தால் சுகாதாரமாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

Related Posts

Leave a Comment