கல்கண்டு சாதம்…

by Lifestyle Editor

தேவையான பொருட்கள் :

அரிசி – 1/2 கப்

பால் – 1 கப்

வெல்லம் – 1/2 கப்

பாசிப்பருப்பு – 3 டேபிள் ஸ்பூன்

தண்ணீர் – தேவையான அளவு

முந்திரி – 2 டேபிள் ஸ்பூன்

நெய் – 1 டேபிள் ஸ்பூன்

உலர் திராட்சை – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

அரிசி மற்றும் பாசிப்பருப்பை தண்ணீர் ஊற்றி நன்றாக அலசி எடுத்துக்கொள்ளுங்கள்.

பின்னர் அவற்றை பிரஷர் குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

இப்போது அவற்றை ஒரு பாத்திரத்தில் மாற்றி மத்து அல்லது கரண்டியை பயன்படுத்தி லேசாக மசித்து கொள்ளுங்கள்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கவும்.

பால் ஒரு கொதி வந்தவுடன் வெல்லம் சேர்த்து கலந்துகொள்ளுங்கள்.

வெல்லம் கரைந்தவுடன் அரிசி மற்றும் பருப்பு கலவையை சேர்த்து நன்கு கலக்கவும்.

இவற்றை 12 நிமிடங்களுக்கு மிதமான தீயில் சமைக்கவும்.

தற்போது கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, உலர் திராட்சை சேர்த்து வறுக்கவும்.

இவை பொன்னிறமாக வறுபட்டவுடன் அரிசி-பால் கலவையில் சேர்த்து கலந்துவிட்டு 2 நிமிடங்கள் சமைக்கவும்.

அவ்வளவுதான் சுவையான கல்கண்டு சாதம் சூடாக பறிமாற தயாராக இருக்கும்.\

Related Posts

Leave a Comment