மொறு மொறு கார தோசை..

by Lifestyle Editor

தேவையான பொருட்கள்:

இட்லி அரிசி – 1 படி
பச்சரிச்சி – 1 கை
பெரிய வெங்காயம் – 4
வர மிளகாய் – 15
துவரம் பருப்பு – 1/2 கப்
கருவேப்பிலை, கொத்தமல்லி இலை – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை:

கார தேசை செய்ய முதலில், இட்லி அரிசி பச்சரிசி துவரம் பருப்பு ஆகியவற்றை நன்றாக கழுவி 3 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இதனை அடுத்து, கிரைண்டரில் அல்லது மிக்ஸியில் எடுத்து வைத்த மிளகாய் மற்றும் ஊற வைத்த பருப்பு மற்றும் அரிசியை சேர்த்து நன்றாக அரைத்து, உப்பு சேர்த்து நான்கு மணி நேரம் குளிக்க வைக்க வேண்டும். வெங்காயம் கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து அரைத்து வைத்த மாவில் கலக்க வேண்டும். இப்போது கார தோசைக்கான மாவு தயார்.

இப்போது தோசை சுட, அடுப்பில் தோசை கல் வைக்கவும். கல் சூடானதும், அதில் கொஞ்சம் எண்ணெய் விட்டு பிறகு கலந்து வைத்த மாவை அதில் வட்ட வடிவில் ஊற்றி தோசை சூட்டு எடுத்தால், கார தோசை ரெடி!! இதற்கு நீங்கள் தேங்காய் தோசை மட்டும் வைத்து சாப்பிட்டால் போதும்.

Related Posts

Leave a Comment