வெஜ் மோமோஸ்…

by Lifestyle Editor

தேவையான பொருட்கள் :

மாவு தயாரிக்க தேவையானவை :

மைதா – 1 கப்

எண்ணெய் – 2 ஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

மோமோஸ் நிரப்ப தேவையானவை :

முட்டைக்கோஸ் – 1/2 கப் (துருவியது)

கேரட் – 1

குடை மிளகாய் – 1/2

பெரிய வெங்காயம் – 1

பூண்டு – 10 பல்

இஞ்சி – 1 இன்ச்

எண்ணெய் – 1 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

மிளகு – ஒரு ஸ்பூன்

வினிகர் – ஒரு ஸ்பூன்

சோயா சாஸ் – ஒரு ஸ்பூன்

கொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடி

மோமோஸ் சட்னி செய்ய தேவையானவை :

தக்காளி – 3

காய்ந்த சிவப்பு மிளகாய் – 8

பூண்டு – 2 பல்

இஞ்சி – ஒரு துண்டு

எண்ணெய் – ஒரு ஸ்பூன்

சர்க்கரை – அரை ஸ்பூன்

கொத்தமல்லி இலை – கைப்பிடியளவு

உப்பு – தேவையான அளவு

வெஜ் மோமோஸ் செய்முறை :

முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் மாவு பிசைய ஒரு கப் மைதா, எண்ணெய், தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

மாவு தயாரானதும் அதை துணி கொண்டு 30 நிமிடங்களுக்கு மூடி ஊறவைக்க வைக்கவேண்டும்.

அடுத்து அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து எண்ணெய் சூடானதும் பொடி பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி துண்டு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.

வெங்காயம் வதங்கியவுடன் பொடியாக நறுக்கிய குடை மிளகாய், துருவிய கேரட், முட்டைகோஸ், சிறிதளவு உப்பு, மிளகுத்தூள், வினிகர், கொத்தமல்லி இலை, சோயா சாஸ் சேர்த்து சிறிது நேரம் கிளறவேண்டும்.

அனைத்தும் நன்கு வெந்தவுடன் இறக்கி தனியே வைத்துவிடுங்கள்.

அதன் பிறகு பிசைந்து வைத்துள்ள மாவில் இருந்து மோமோ செய்ய ஒரு சிறிய உருண்டையை எடுத்து சப்பாத்தி கட்டையில் வைத்து தேய்த்து கொள்ளுங்கள்.

பிறகு அதில் தயார் செய்து வைத்துள்ள காய்கறி கலவையை வைத்து அதனை முழுவதும் மூடும்படி வடிவமைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து சூடாக்கவும். பிறகு இட்லி தட்டை எடுத்து அதில் செய்து வைத்துள்ள மோமோஸை வைத்து 10 நிமிடங்களுக்கு அதை வேக வைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

அவ்வளவுதான் சுட சுட சுவையான வெஜ் மோமோஸ் ரெடி…

மோமோஸ் சட்னி செய்முறை :

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி சூடானதும் காய்ந்த மிளகாய் சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

அடுத்து தக்காளியை அதேபோல் தண்ணீரில் சேர்த்து வேக வைத்து அதன் தோலை உரித்து வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

பின்பு ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வேகவைத்து நறுக்கி வைத்துள்ள தக்காளி, வேகவைத்த காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, தேவையான அளவு உப்பு, சிறிதளவு சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.

அனைத்தும் நன்கு வதங்கியவுடன் எடுத்து ஆறவைத்து பின்பு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

இப்போ சூடான மோமோஸ் உடன் தொட்டு சாப்பிட சட்னியும் தயார்…

Related Posts

Leave a Comment