கர்ப்பிணி பெண் கோடையைகுளிர்ச்சியாக்க பின்பற்ற வேண்டிய குறிப்புகள்..!

by Lifestyle Editor

கர்ப்ப காலத்தில் நீரேற்றமாக இருப்பது மிகவும் அவசியமானது. ஒவ்வொரு ட்ரைமெஸ்டர் காலங்களிலும் இரத்த அளவு சீராக அதிகரிக்கிறது. நீரேற்றமாக இருப்பதன் மூலம் அம்னோடிக் திரவம் குறையாமல் இருக்கிறது. கர்ப்பிணிக்கு அதிக நீரேற்றம் தேவைப்படுவதால் கர்ப்பகாலத்தில் என்ன குடிக்க வேண்டும் என்ன சாப்பிட வேண்டும் என்பதை அறிந்துகொள்வது தாய்க்கும் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். கர்ப்பகாலத்தில் நீரிழப்பு ஏற்படும் அபாயங்களை தவிர்க்க என்ன செய்யலாம் என்ற குறிப்புகளை இப்போது தெரிந்துகொள்வோம்.

​கர்ப்பிணி எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?​

கர்ப்ப காலத்தில் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் அம்னோடிக் திரவம் மற்றும் இரத்த அளவு அதிகரிக்க உதவும். கர்ப்பிணி பெண் நாள் ஒன்றுக்கு 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதே நேரம் merican College of Obstetrics and Gynecology (ACOG) கூற்றுப்படி நாள் ஒன்றுக்கு சுமார் 12 டம்ளர்கள் தண்ணீர் எடுத்துகொள்ள வேண்டும். இது இரண்டு லிட்டருக்கு மேற்பட்ட அளவு. அதனால் தாகம் இல்லையென்றாலும் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்யும் கர்ப்பிணிகளுக்கு இன்னும் அதிக தண்ணீர் தேவைப்படலாம்.

​கர்ப்ப காலத்தில் அதிக திரவங்களை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்?​

அதிக திரவங்களை குடிப்பது மலச்சிக்கலை தவிர்க்க உதவும்.
மூலநோய் கர்ப்பகாலத்தில் பொதுவான பிரச்சனை.
காலை நோய் அறிகுறியை கட்டுப்படுத்த செய்கிறது.
சரும வறட்சியை தடுத்து சருமத்தை மென்மையாக வைத்திருக்கிறது.
உடலுக்கு ஆற்றலை அதிகரிக்கும்.
கோடையிலும் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்
கால் வீக்கம் அல்லது எடிமாவை குறைக்க செய்கிறது.
தண்ணீர் குடிப்பது சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் மற்றும் குறைப்பிரசவம் அபாயத்தை தடுக்கிறது.

கர்ப்பிணிக்கு நீரிழப்பு அறிகுறிகள் ஏற்பட்டால் எப்படி அறிவது?​

கர்ப்பகாலத்தில் நீரிழப்பு அறிகுறிகள் மோசமானது. மேலும் குமட்டல், வாந்தி, நாளமில்லா செயல்பாடு, ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் போன்றவை இன்னும் நீரிழப்பு அபாயத்தை அதிகரிக்கும். நீரிழப்பு இருக்கும் போது சில அறிகுறிகள் மூலம் அதை கண்டறியலாம்.

சிறுநீர் இருண்டு போவது
தாகமாக உணர்வது
தசைப்பிடிப்பு இருப்பது
தலைவலி
வறண்ட வாய், மூக்கு மற்றும் கண்கள்
உதடுகள் மற்றும் முலைக்காம்புகள் வெடிப்பு போன்றவை இருக்கலாம்.

தண்ணீருக்கு மாற்றாக நீரேற்றம் உண்டு செய்யும் திரவங்கள் :

சர்க்கரை சேர்க்காத பழச்சாறுகள், சூப், பழங்கள் சேர்த்த நீர், பழங்கள், நீர்ச்சத்துமிக்க காய்கறீகள் போன்றவற்றில் கவனம் செலுத்தலாம். எனினும் உடலில் நீரேற்றம் பற்றி எப்போதும் விழிப்புணர்வுடன் இருங்கள். போதுமான அளவு திரவங்கள் குடிப்பதால் அரிதாகவே தாகம் ஏற்படும். சிறுநீர் வெளிர்நிறமாக இருந்தால் நீரேற்றமாக இருக்கிறீர்கள். சிறுநீர் அடர்த்தியாக இருந்தால் நீரிழப்பு கொண்டிருக்கலாம்.

கர்ப்பிணி போதுமான அளவு தண்ணீர் குடிக்க என்ன செய்ய வேண்டும்?​

தினமும் குடிக்க வேண்டிய நீரின் அளவை கணக்கிட்டு வையுங்கள்.
படுக்கைக்கு செல்வதற்கு முன்பு சிறுநீர் கழிக்க நேடுமே என்று தவிர்க்காமல் தண்ணீர் குடித்துவிட்டு படுப்பது காலை சுகவீனத்தை தவிர்க்க செய்யும்.
நீர் குளிர்ச்சியாகவோ இளஞ்சூடாகவோ இருக்க வேண்டாம். அறைவெப்பநிலைக்கு இருக்கட்டும். கோடை என்று ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து நீரை குடிக்க கூடாது. மண் பானையில் வைத்து குடிக்கலாம்.

கர்ப்பிணி எடுத்துகொள்ள வேண்டிய நீர்ச்சத்து உணவுகள்​ :

கர்ப்பிணி தினசரி உணவில் சேர்க்க வேண்டிய நீர்ச்சத்து மிக்க உணவுகள் கோடை காலத்திலும் உடலை குளிர்விக்க செய்யும்.

தர்பூசணி -92% நீர்ச்சத்து மிக்கவை
ஸ்ட்ராபெர்ரி -91% நீர்ச்சத்துகொண்டவை
வெள்ளரிக்காய் – 95% நீர்ச்சத்து கொண்டவை
கீரைகள் – 95% நீர்ச்சத்து கொண்டவை
பாகற்காய் -90% நீர் கொண்டவை
தயிர்- 85% நீர்ச்சத்து கொண்டவை

பழங்களை எப்போதும் சாறாக எடுத்துகொள்ள வேண்டாம். அவை இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். அதற்கு மாற்றாக பழத்துண்டுகளாக எடுத்துகொள்ளலாம்.

Related Posts

Leave a Comment