வருகிற 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை – எந்த மாவட்டத்திற்கு தெரியுமா?

by Lifestyle Editor

கோடைகாலம் என்பதால் நீலகிரி மாவட்டத்துக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து வழக்கம். நீலகிரி மாவட்டத்தில் இந்தாண்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உதகையில் 126-வது மலர்க்காட்சி வரும் மே 10-ம் தேதி முதல் மே 20-ம் தேதி வரையும், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 64-வது பழக்காட்சி மே 24 முதல் மே 26 வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது.

இந்நிலையில் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெறும் 126வது மலர்க் கண்காட்சியை முன்னிட்டு மே 10-ம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஈடாக மே 18-ம் தேதி பணி நாளாக செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment