தாய்ப்பால் உற்ப்பத்திக்கு உதவும் கொண்டைக்கடலை..

by Lifestyle Editor

புரதம் அதிகப்படியாக இருக்கக்கூடிய ஒரு உணவு தான் கொண்டைக்கடலை. கால்சியம், நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்து உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளது. இது பல்வேறு உடல்நல பிரச்சனைகளை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

அசைவ உணவுகளை சாப்பிடாத சைவ பிரியர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். இந்த கொண்டைக்கடலையை ஊறவைத்து அவிக்காமல் சாப்பிடுவது உடலுக்கு நேரடியாக சத்துக்கள் கிடைக்க உதவுகிறது. சிலருக்கு இது பிடிக்காமல் போகலாம் எனவே வேகவைத்து எடுத்துக் கொள்ளலாம்.

ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின்கள் அதிகரிக்க இது உதவுகிறது. அத்துடன் இது உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. இதில் குறைந்த கலோரிகள் மட்டும் தான் இருக்கிறது. அத்துடன் இது நீண்ட நேரம் பசிக்காமல் பார்த்துக் கொள்வதால் தேவை இல்லாமல் உணவு சாப்பிடுவதை தவிர்க்கலாம். இதன் மூலம் எடை குறையும்.

இதில் தேவையான அளவு மெக்னீசியம் இருக்கிறது. உடலை இது நீரேற்றம் ஆக வைத்திருக்க உதவும். இதனால் தோளில் சுருக்கம் வறட்சி உள்ளிட்டவை இல்லாமல் பார்த்துக் கொள்கிறது. இதில் நிறைய ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் பைட்டோநியூட்ரியன்கள் இருப்பதால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. சுண்டலை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால், இதயம் தொடர்பான நோய்களைத் தவிர்க்கலாம்.

கொண்டைக்கடலை

ரத்த சோகை பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு இந்த கொண்டைக்கடலை மிகவும் உதவியாக இருக்கும். அடிக்கடி கொண்டை கடலையை உணவில் சேர்த்துக் கொள்வதால் ஹீமோகுளோபின் அதிகரித்து ரத்த சோகையை விரட்ட உதவுகிறது. கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் இந்த கொண்டைக்கடலையை சாப்பிடுவது அவர்களுக்கு ஹீமோகுளோபின் அதிகரிக்க உதவும்.

கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தையின் வளர்ச்சி மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த கொண்டைக்கடலை உதவுகிறது. பாலூட்டும் தாய்மார்களுக்கு பெரும் பிரச்சனையாக இருப்பது பால் உற்பத்தி தான். இந்த கொண்டைக்கடலையை நன்றாக சாப்பிட்டு வந்தால் அது பால் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதில் இருக்கும் ஊட்டச்சத்து குழந்தை பெற்ற தாய்மார்களின் ஆற்றல் குறைவதை தடுக்க அவர்களுக்கு ஊட்டச்சத்து அளிக்கிறது.

Related Posts

Leave a Comment