சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து-மீனாவை வீட்டைவிட்டு வெளியேற்ற பிளான் போட்ட விஜயா- அண்ணாமலை அதிரடி

by Lifestyle Editor

விஜய் தொலைக்காட்சியில் ஹிட் சீரியலாக ஓடிக் கொண்டிருக்கிறது சிறகடிக்க ஆசை தொடர்.

முத்து-மீனா இவர்களை சுற்றிய கதையாக ஒளிபரப்பாகும் இந்த தொடரில் அடுத்தடுத்து அதிரடி கதைக்களமாக அமைந்து வருகிறது.

ஸ்ருதி அம்மா 50 சவரன் நகை கொண்டு வர விஜயா இதுதான் சந்தர்ப்பம் என மீனாவை மோசமாக பேசுகிறார்.

இதனால் கோபமான மீனா அவர் வாங்கிக் கொடுத்த அத்தனை நகைகளையும் கழற்றி கொடுத்துவிட்டார்.

இன்றைய எபிசோடில் விஜயா, மீனா-முத்து இங்கு இருப்பதால் தான் பிரச்சனை அவர்களை வேறு வீட்டிற்கு அனுப்பிவிடலாம் என தனது கணவர் அண்ணாமலையிடம் கூறுகிறார்.

அண்ணாமலை முடியாது என கூறாமல் விஜயாவிடம் யோசித்து கூறுகிறேன் என்கிறார். இதனால் ரசிகர்கள் அடுத்தடுத்து என்ன கதைக்களம் அமையும் என்பதை அவர்களே ஒரு ஸ்டோரி கூறுகிறார்கள்.

Related Posts

Leave a Comment