மணியை அசிங்கப்படுத்திய ரவீனா குடும்பத்தினர்.. கவலையில் புலம்பும் முக்கிய போட்டியாளர்…

by Lifestyle Editor

மணியை அசிங்கப்படுத்தி ரவீனா குடும்பத்தினர் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.

போட்டியாளர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து பிக்பாஸ் போட்டியாளர்களுடன் சந்தோசமாக இருந்து விட்டு செல்கிறார்கள்.

நேற்றைய தினம் ரவீனாவை பார்ப்பதற்கு உள்ளே வந்த அண்ணா மற்றும் ஆண்ட்டி ஆகிய இருவரும் கடுமையாக மணியை திட்டியுள்ளனர்.

இவர்களின் உறவு தேவையில்லை, தனியாக விளையாடு என்பது போல் இருவரும் பேசியிருந்தார்கள்.

இதனை தொடர்ந்து ரவீனா ஆண்ட்டி Code Word பயன்படுத்தி பிரதீப் குறித்து பேசியுள்ளார்கள். இதனை கடுமையாக பிக்பாஸ் கண்டித்து அவர்களை உடனடியாக வீட்டைவிட்டு வெளியேற்ற முடிவு செய்து விட்டார்.

இந்த நிலையில் ரவீனா – மணியிடம் பேசாமல் இரவு உறங்க சென்றுவிட்டார்.

இதனால் மனமுடைந்து போன மணி- தினேஷ், விக்ரமிடம் இரவு அமர்ந்து புலம்பிக் கொண்டிருந்தார்கள்.

காலையில் எழுந்தவுடன் ரவீனா வீட்டாரை கடுப்பாக்க முடிவு செய்த மணி ரவீனாவை அழைத்து பேசிக் கொண்டிருக்கிறார்.

அதாவது, வந்தவுடன் மணியை அசிங்கப்படுத்தியதாகவும் அவர் ரவீனாவிடம் கூறுகிறார். இப்படியாக இன்றைய தினத்திற்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இனி வரும் நாட்களில் மணி – ரவீனா ஆகிய இருவரும் எப்படி விளையாட போகிறார்கள் என்பதனை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Related Posts

Leave a Comment