நாணயத்தின் சூப்பர் பவர்

by Column Editor

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சுவாரஸ்யமாக சென்றுக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியை இன்னும் சுவாரஸ்யமாக்க 5 நாணயங்களை கைப்பற்றும் வாய்ப்பை வழங்கினார் பிக் பாஸ். நாணயத்தை கைப்பற்றியவர்களுக்கு பல்வேறு ஆற்றல்கள் வழங்கப்படுகிறது. கடந்த வாரம் நெருப்பு நாணயத்தை கைப்பற்றிய இசைவாணிக்கு வீட்டை ஆளுமை செய்யும் ஆற்றல் வழங்கப்பட்டது. ஆனால், அவரது பேச்சு பிக் பாஸ் வீட்டில் எடுபடவில்லை. அதுமட்டுமின்றி, கேப்டனாக இருந்த மதுமிதாவுக்கும் இசைவாணிக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டதால் இசைவாணியால் டாஸ்க்கை முழுவதுமாக செய்யமுடியவில்லை.

இதைத்தொடர்ந்து, நேற்றைய எபிசோடில் நிலம் நாணயத்தை கைப்பற்றிய நிரூப்புக்கு வீட்டை ஆளுமை செய்யும் சூப்பர் பவர் கொடுக்கப்பட்டது. நிரூப் தனது அசிஸ்டெண்டாக அக்ஷராவை தேர்ந்தெடுத்துக் கொண்டார். பிக் பாஸ் வீட்டில் நிரூப்பின் குரல் ஓங்கி நிற்கிறது. அவர் சொல்வதை கேக்க வேண்டிய நிலைமையில் பிற ஹவுஸ்மேட்ஸ் இருக்கிறார்கள். சொல்வதை கேட்காத ஹவுஸ்மேட்ஸ்க்கு நிரூப் தண்டனை கொடுக்கிறார்.

இந்த நிலையில், இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. அதில், பெண்கள் அனைவரும் பெட்ரூமில் ரெடி ஆகிக் கொண்டிருக்கின்றனர். பெட்ரூம் யூஸ் பண்ண 7 நிமிஷம்… 2 நிமிஷம் தான் இருக்கு என்று கத்துகிறார் நிரூப். பெண்கள் டா கொஞ்சம் டைம் கொடு என்று பவானி ரெட்டி சொல்வதையும் கேட்காத நிரூப், நேரத்தை மீறியவர்களுக்கு பச்சை மிளகாய் மற்றும் பாகற்காய் சாப்பிடுவதை தண்டனையாக கொடுக்கிறார். சுருதி, பவானி ரெட்டி உள்ளிட்டோர் பச்சை மிளகாய் சாப்பிடுவது போல புரோமோ முடிகிறது.

Related Posts

Leave a Comment