இன்றைய ராசி பலன்கள் (02.11.2021)

by Column Editor

மேஷம்

இன்றைய தினம் சந்திரன் சஞ்சாரம் ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் உள்ளது. பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும்.

ரிஷபம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். ராசிநாதன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் துணிச்சலுடன் வேலையில் பணியாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

மிதுனம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். பண வரவை விட செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.

கடகம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.

கன்னி

சந்திரன் இன்று உங்கள் ராசிக்குள் பயணம் செய்கிறார். தடைப்பட்ட சுபகாரியம் கைகூடும். தொழில் சம்பந்தமான வங்கி கடன் எளிதில் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

துலாம்

சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். குடும்பத்தில் உள்ளவர்களின் அதிருப்திக்கு ஆளாகக்கூடும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

விருச்சிகம்

சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு தொழில் ரீதியாக புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் உண்டாகும்.

தனுசு

சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீர்ந்து சுமுக நிலை ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அனுகூலப்பலன் கிட்டும்.

மகரம்

சந்திரன் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். வேலை செய்யும் இடத்தில் வீண் பிரச்சினைகளை தவிர்க்க உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. இன்றைய தினம் சுப காரிய பேச்சுவார்த்தைகளை தொடங்கலாம்.

கும்பம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். உத்தியோகஸ்தர்கள் தங்கள் மேலதிகாரிகளுடன் பேசும் பொழுது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.

மீனம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர் பதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும்.

Related Posts

Leave a Comment