தாமரை இந்த வாரம் வெளியேறுகின்றாரா? அனல் பறக்கும் ஓட்டுகள்… முதலிடத்தில் யார் தெரியுமா?

by Column Editor

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் தாமரை வெளியேற போவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த வாரம் பதிவான வாக்குகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த வாரம் அதிக வாக்குகளை பெற்று பிரியங்கா டாப்பில் உள்ளார்.

அவரை தொடர்ந்து இமான் அண்ணாச்சி இரண்டாவது இடத்திலும், ஐக்கி பெர்ரி மூன்றாவது இடத்திலும், நிரூப் நான்காவது இடத்திலும் உள்ளனர். பாவனி ஐந்தாவது இடத்திலும் தாமரை குறைந்த வாக்குகளை பெற்று கடைசி இடத்திலும் உள்ளார்.

இதனால் இந்த வாரம் தாமரை வெளியேற்றப்படுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இருப்பினும் இன்று நள்ளிரவு வரை வாக்குகளை பதிவு செய்யலாம் என்பதால் வாக்கு எண்ணிக்கை மாறலாம் என்றும் கூறப்படுகிறது. பாவனிக்கும் தாமரை செல்விக்கும் சில நூறு வாக்குகள் மட்டுமே வித்தியாசம் உள்ளது.

இதனால் இறுதி முடிவு எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என கூறப்படுகிறது. தெருக்கூத்து கலைஞரான தாமரை செல்வி புதுக்கோட்டையை சேர்ந்தவர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள தாமரை செல்வி மனதில் பட்டதை பட்டென பேசி வருகிறார். சாதாரணமான விஷயத்திற்கு கூட சத்தமாக கத்தி பேசும் தாமரை இதுதான் தன் குணம் என கூறி வருகிறார்.

Related Posts

Leave a Comment