அபார வெற்றி பெற்ற ‘மாநாடு’… படக்குழுவினரைப் பாராட்டிய ரஜினிகாந்த்!

by Column Editor

மாநாடு படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து ரஜனிகாந்த் மாநாடு படக்குழுவினருக்கு போன் செய்து பாராட்டியுள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகியுள்ள ‘மாநாடு’ திரைப்படத்திற்கு அபார வரவேற்பு கிடைத்துள்ளது. சிம்புவின் அசத்தலான நடிப்பில் வெளியான இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். முதல் முறையாக டைம் லூப் கதைக்களத்தை தேர்ந்தெடுத்து இயக்குனர் வெங்கட் பிரபு வெற்றிப் பெற்றுள்ளார்.

வில்லனாக தோன்றிய எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. யுவனின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்த முதல் நாள் வசூல் ருநாள் வசூல் 8 கோடியை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் சிறந்த படங்கள் வெளியாகும் போது படக்குழுவினரைப் பாராட்டுவது வழக்கம். அந்த வகையில் தற்போது ரஜினி மாநாடு படக்குழுவினருக்கு போன் செய்து படம் சிறப்பாக வந்ததற்கு பாராட்டுள்ளார். இதை படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு பெருமையுடன் பகிர்ந்துள்ளார்.

“இனிய நாளாக அமைந்துவிட்டது இந்நாள்.

சூப்பர் ஸ்டாரின் அழைப்பும் பாராட்டும் இப்படத்தின் வெற்றியை உறுதிசெய்திருக்கிறது…

நல்லதைத் தேடிப் பாராட்டும் இம்மனசே இன்னும் உங்களை உச்ச சிம்மாசனத்தில் உயர்த்தி வைத்திருக்கிறது.

மிகுந்த பலம் பெற்றோம். ஒட்டுமொத்த படக்குழு சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்…

மிக்க நன்றி சார்.” என்று படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment