392
			
				            
							                    
							        
    நடிகர் சூர்யா திரைப்படங்கள் இப்படியும் இருக்கலாம் என்று வித்தியாசங்கள் காட்டி வருகிறார்.
ஒரு மாஸ் பாடல், காதல் காட்சி, 4-5 பஞ்ச் என்று பேசிவிட்டு செல்லாமல் சமூகத்துக்கு தேவையான, மக்களுக்கு தெரிய கூடிய சில விஷயங்களை தனது படத்தில் வைத்து நடித்து வருகிறார்.
அப்படி அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான சூரரைப் போற்று, ஜெய் பீம் போன்ற படங்கள் எல்லாம் மக்களின் மனதில் பெரிய இடத்தை பிடித்துள்ளன.
ரசிகர்களுக்கு சூரரைப் போற்று படம் திரையரங்கில் வெளியாகவில்லையே என்ற வருத்தம் உள்ளது.
அப்படி வருத்தப்பட்ட ரசிகர்களுக்கு ஒரு சூப்பரான செய்தி வந்துள்ளது, ஆனால் தமிழ் ரசிகர்களுக்கு இல்லை. கேரளாவில் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபா திரையரங்கில் தான் இந்த படம் டிசம்பர் 12ம் தேதி வெளியாக இருக்கிறதாம்.
