நடிகையின் அறுவை சிகிச்சைக்கு உதவிய சமந்தா

by Column Editor

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா அடுத்து இந்தி படங்களிலும் நடிக்க இருக்கிறார். அத்துடன் சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை சமூக சேவை பணிகளுக்கும் செலவிட்டு வருகிறார். ஏழை சிறுமிகளுக்கு கல்வி கற்கவும் உதவி வருகிறார். சமீபத்தில் நடிகர் பவன் கல்யாண் கூட சமந்தாவிடம் இதுபோன்ற நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என பாராட்டினார்.

சமந்தாவிடம் உதவி பெற்றவர்களில் ஒரு நடிகையும் இருக்கிறார். அந்த நடிகையின் பெயர் தேஜஸ்வி மாதிவாடா. இவர் பல தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார். தேஜஸ்வி மாதிவாடா கூறும்போது, “சிறுவயதிலேயே தாயை இழந்து தந்தை குடிபோதைக்கு ஆளானதால் அனாதையாக வளர்ந்தேன். சினிமாவுக்கு வந்த பிறகும் பல கஷ்டங்களை அனுபவித்தேன்.

இந்நிலையில் எனக்கு ‘டிபி’ நோய் தாக்கியது. அப்போது ஒரு அறுவை சிகிச்சை செய்து கொள்ள பணம் இல்லாமல் கஷ்டப்பட்டேன். அந்த நேரத்தில் சமந்தா பெரிய மனதுடன் முன்வந்து சொந்த செலவில் எனக்கு அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றினார்” என்று தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment