தெலுங்கு படத்தை காப்பி அடித்தாரா லோகேஷ்: விஜய்யின் லியோ ப்ரோமோவை கூறுபோடும் ரசிகர்கள்!

by Lifestyle Editor

தளபதி 67என அறிவிக்கப்பட்டிருந்த புதிய திரைப்படம் தான் லியோ. இத்திரைப்படத்திற்கான டைட்டில் ப்ரோமோவை வெள்ளிக்கிழமை வெளியிட்டிருந்து.

தற்போது இந்த டைட்டில் ப்ரோமோப் பார்த்து விட்டு சிலர் இது தெலுங்கு பட காப்பி என விமர்சித்து வருகிறார்கள்.

தளபதியின் 67ஆவது திரைப்படம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் விஜய்யின் 67வது படத்திற்கு லியோ எனப் பெயரிட்டு டைட்டில் ப்ரொமோவை வெளியிட்டுள்ளது.

இத்திரைப்படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார். மேலும் படம் இந்தாண்டு அக்டோபர் 19ஆம் திகதி வெளியாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த டைட்டில் ப்ரோமோ வெளியாகி 18 மணி நேரத்தில் 13 மில்லியன் பார்வைகளைக் கடந்திருந்தது. 2 நிமிடம் 48 நொடிகள் நீளமிருக்கும் இந்த டைட்டில் ப்ரொமோ முழுவதும் நடிகர் விஜய் மட்டுமே வருகிறார். வேறு எந்த முகங்களும் காட்டப்படவில்லை.

மேலும், இத்திரைப்படத்தில் கைதி, விக்ரம் படங்களின் கதாபாத்திரங்கள் லியோ படத்திலும் வருமா என்பதே ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

தெலுங்கு பட காப்பியா?

தளபதியின் 67ஆவது படமான லியோ திரைப்படத்திற்கு பெரும் வரவேற்ப்பு கிடைத்திருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் ப்ரோமோ நாகார்ஜூனா நடித்து வெளியான ‘தி கோஸ்ட்’ படத்தின் டைட்டில் ப்ரொமோவை காப்பியடித்து வெளிவந்துள்ளதாக பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், ஒரு பதிவில் லியோ மற்றும் தி கோஸ்ட் என இரண்டு படத்தின் டீசரில் வரும் காட்சிகளில் விஜய்யும், நாகர்ஜுனாவும் வாளை தயாரிக்கும் காட்சிகளை ஒப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்கள்.

Related Posts

Leave a Comment