உலகளவில் நடைபெறும் கோல்டன் க்ளோப் விருது விழாவில் தேர்வாகிய ‘ஜெய் பீம்’

by Column Editor

‘ஜெய் பீம்’ திரைப்படம் கோல்டன் க்ளோப் திரைப்பட விழாவில் தேர்வாகி உள்ளது.

த.செ.ஞானவேல் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளிவந்த படம் ‘ஜெய் பீம்’. இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது. சூர்யா அந்தப் படத்தை தனது 2D என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்தார்.

மணிகண்டன், லிஜோ மோல், பிரகாஷ் ராஜ் ஆகியோர் இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். ‘ஜெய் பீம்’ படம் ராசாக்கண்ணு என்பவருக்கு நடைபெற்ற உண்மை சம்பவங்களைத் தழுவி எடுக்கப்பட்ட படமாகும். நடிகர் சூர்யா அந்தப் படத்தில் இருளர் பழங்குடி இன மக்களின் வாழ்வுரிமைக்காக போராடும் வழக்கறிஞராக நடித்துள்ளார். ‘ஜெய் பீம்’ படம் பேசுபொருளாகவும் மாறியது. படத்திற்கு பல அங்கீகாரங்களும் கிடைத்து வருகின்றன.

இந்நிலையில், தற்போது ‘ஜெய் பீம்’ படம் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் கோல்டன் க்ளோப் விருது விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது. உலகளவில் நடைபெறும் மிக முக்கியமான திரைப்பட விருது விழாக்களில் கோல்டன் க்ளோப் திரைப்பட விழா ஒன்று. தற்போது அதில் ‘ஜெய் பீம்’ திரைப்படம் சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களுக்கான வரிசையில் போட்டிக்காக இடம்பெற்றிருக்கிறது.

Related Posts

Leave a Comment