பொன்னியின் செல்வனுக்கு பிரம்மாண்ட டிஆர்பி ரேட்டிங்! விஸ்வாசத்தை விட அதிகமா …

by Lifestyle Editor
0 comment

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் முதல் பாகம் தியேட்டர்களில் பிரமாண்ட வசூல் பெற்ற நிலையில் சன் டிவியில் பொங்கலுக்கு முந்தைய வாரத்தில் ஒளிபரப்பினார்கள். அதற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது PS1 டிவி ப்ரீமியரின் டிஆர்பி ரேட்டிங் விவரங்கள் வெளியாகி இருக்கிறது. பொன்னியின் செல்வன் 16.38 TVR பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது தற்போது முதலிடத்தில் இருக்கும் அஜித்தின் விஸ்வாசம் பட டிஆர்பி ரேட்டிங்கை விட மிக குறைவு தான்.

பொங்கல் பண்டிகைக்கு இந்த படம் டிவியில் ஒளிபரப்பாகி இருந்தால் இன்னும் அதிகம் ரேட்டிங் கிடைத்திருக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் தற்போது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் பற்றிய சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது. வரும் ஏப்ரல் 28ம் தேதி PS 2 திரைக்கு வரும் நிலையில் அதன் டீஸர் மார்ச் 1ம் தேதி வெளியிட படக்குழு தயாராகி வருகிறது என தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் படத்தை பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்யவும் திட்டமிட்டு வருகிறார்கள் என்பதால், மிகப்பெரியவசூல் சாதனையை பொன்னியின் செல்வன் 2 செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment