308
தமிழ் திரையுலகின் கனவு திரைப்படம் பொன்னியின் செல்வன். இதனை தற்போது இயக்குனர் மணி ரத்னம் பிரமாண்டமாக படமாக்கி வருகிறார்.
இப்படத்தில், விக்ரம், அமிதாப் பச்சன், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார் என திரையுலக பட்டாளமே நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் முதல் பாகம் வரும் சம்மர் 2022ஆம் ஆண்டு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர். ஆனால், எந்த தேதி என்று அதில் குறிப்பிடவில்லை.இந்நிலையில், வரும் சம்மர், ஏப்ரல் 28ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்று சுவாரஸ்ய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே சம்மர் ரிலீஸில், கே.ஜி.எப் 2, பீஸ்ட், மற்றும் விக்ரம் இருக்கின்ற நிலையில், பொன்னியின் செல்வன் படமும் சம்மரில் ரிலீசாகிறது குறிப்பிடத்தக்கது.