அடுத்தடுத்து கமலிடம் மொக்கை வாங்கிய அபிஷேக்… கழுவி ஊற்றும் ரசிகர்கள் !

by Column Editor

இந்த வாரம் யார் காப்பாற்றப்படுகிறார் என்பதை அறிவிக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் வாரந்தோறும் ஒருவர் வெளியேற்றப்படுவது வழக்கம். அது யார் என்பதை இன்று இரவு ஒளிப்பாகும் நிகழ்ச்சியில் கமல் அறிவிப்பார். அதற்கு முன்னரே யார் காப்பாற்றப்பட்டுள்ளார் என்பதை கமல் தெரிவிப்பார். அந்த வகையில் இன்றைய நிகழ்ச்சியில் யார் காப்பாற்றப்பட்டுள்ளார் என்பதை தெரிவிக்கும் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த ப்ரோமோவில் பேசும் கமல் இந்த வாரம் நாமினேஷில் 8 பேர் உள்ளனர். அந்த 8 பேரில் ஒருவர்தான் இந்த வாரம் வெளியேறவுள்ளார். அதனால் மற்றவர்கள் காப்பாற்றப்பட இருக்கிறார்கள். இதில் முதலில் யார் காப்பாற்றப்பட வேண்டும் என்று அபிஷேக்கிடம் கமல் கேட்கிறார். அதற்கு பதிலளிக்கும் அபிஷேக், தாமரைதான் முதலில் காப்பாற்றப்பட வேண்டும் என்கிறார். ஆனால் சிபிதான் காப்பாற்றப்படுவதாக கூறி அபிஷேக் மொக்கை செய்து உட்கார சொல்கிறார் கமல்.

இதையடுத்து சிபிக்கு அடுத்த யார் காப்பாற்றப்பட வேண்டும் என்று கமல் கேட்க, முதலிலேயே பின்னிட்டேன்‌. இப்ப என்ன பண்ணப்போகிறேன் என்று தெரியவில்லை என்று தயக்கத்துடன் ஆரம்பிக்கும் அபிஷேக், மீண்டும் தாமரை பெயரை தவறாக சொல்லி கமலிடம் இரண்டாவது முறையாக மொக்கை வாங்கும் ப்ரோமோவை வெளியிட்டுள்ளனர். இப்படி தொடர்ந்து மொக்கை வாங்கும் அபிஷேக்கை ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

Related Posts

Leave a Comment