குக் வித் கோமாளி சீசன் 3 எப்போது ஆரம்பம் தெரியுமா..

by Column Editor

ரசிகர்களால் பெரிதளவில் கொண்டாடப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்று விஜய் டிவியின் குக் வித் கோமாளி.

முதல் சீசனின் வெற்றியை தொடர்ந்து துவங்கிய குக் வித் கோமாளி சீசன் 2 ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்தது.

அடுத்ததாக குக் வித் கோமாளி சீசன் 3 எப்போது ஆரம்பிக்கும் என்று தான் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் 3 குறித்து சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அடுத்த மாதம் டிசம்பர், இரண்டாம் வாரத்தில் குக் வித் கோமாளி சீசன் 3 துவங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தற்போது குக் வித் கோமாளி சீசன் 3யின் பின்னணி வேலைகள் நடந்து வருவதாகவும், போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் வேலை நடந்து வருதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

ஒரு புறம் பிக் பாஸ் சீசன் 5 மற்றொருபுறம் குக் வித் கோமாளி சீசன் 3 ஒளிபரப்பாகவுள்ள நிலையில் கண்டிப்பாக விஜய் டிவியின் TRP உச்சத்திற்கு செல்லும் என்று கூறுகின்றனர்.விரைவில் குக் வித் கோமாளி சீசன் 3 குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment