‘குக் வித் கோமாளி சீசன் 5’… போட்டியாளராக களமிறங்கும் பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

by Lifestyle Editor

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில், அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்த ஸ்ட்ரெஸ் பஸ்டர் நிகழ்ச்சி என்றால் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி தான். பிக்பாஸ் முடிவடைந்த அடுத்த மாதமே ‘குக் வித் கோமாளி’ சீசன் 5 துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிகழ்ச்சி துவங்குவதால் தாமதம் ஏற்பட்டது.

இதை தொடர்ந்து, ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் தயாரிப்பாளர், இயக்குனர், மற்றும் நடுவர்களின் உருவான வெங்கடேஷ் பட் ஆகியோர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது இந்த நிகழ்ச்சி துவங்குமா எங்கிற சந்தேகத்தையும் ரசிகர்கள் மனதில் எழ வைத்தது. ஆனால் தற்போது புதிய டீமுடன்… புத்தம் புதிய கோமாளிகளுடன், ஸ்டைலிஷ் நடுவராக மதம்பட்டி ரங்கராஜனுடன் நிகழ்ச்சி துவங்குவதை விஜய் டிவி உறுதி செய்தது.

அதன்படி, ஏப்ரல் 27-ஆம் தேதி குக் வித் கோமாளி சீசன் 5 துவங்க உள்ள நிலையில், அடுத்தடுத்து இந்த நிகழ்ச்சி குறித்த புரோமோ வெளியிடப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் கோமாளிகள் யார் யார் என்பதை அறிவிக்கும் விதமாக வீடியோ வெளியான நிலையில், தற்போது இந்த முறை குக்காக களமிறங்க உள்ள போட்டியாளர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி இந்த முறை யாரும் எதிர்பாராத சில பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். ஷெர்லின் சோயா, அக்ஷய் கமல், நடிகை திவ்யா துரைசாமி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சூப்பர் சிங்கர் பூஜா, ஃபுட் ரிவியூவர் இர்பான், பாண்டியன் ஸ்டார் சீரியல் நடிகர் வசந்த் வசி, தொகுப்பாளினி ப்ரியங்கா, VTV கணேஷ், மற்றும் சீரியல் நடிகை சுஜிதா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

எதிர்பாராத பல பிரபலங்கள் குக்குகளாக இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளதால், நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. ரசிகர்களும் நிகழ்ச்சியை காண ஆயத்தமாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment