‘குக் வித் கோமாளி சீசன் 4’ போட்டியாளர்களின் சம்பள விவரம் …

by Lifestyle Editor

மக்களின் மனம் கவர்ந்த ரியாலிட்டி ஷோவாக திகழ்ந்து வருகிறது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. சமையல் நிகழ்ச்சியான இது இதுவரை 3 சீசன்கள் முடிந்து தற்போது நான்காவது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் விசித்ரா, மைம் கோபி, ஷெரின், சிருஷ்டி டாங்கே, விஜே விஷால், ஆண்ட்ரியன், காளையன், கிஷோர் ஆகியோர் உடன் கடந்த மூன்று சீசன்களாக கோமாளியாக கலக்கிய சிவாங்கியும் இந்த சீசனில் குக் ஆக களமிறங்கி சமைத்து வருகிறார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதுவரை 5 போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி உள்ளனர். தற்போது சிவாங்கி, ஆண்ட்ரியன், சிருஷ்டி, மைம் கோபி, விசித்ரா ஆகியோர் டாப் 5 போட்டியாளர்களாக உள்ளனர். இவர்களுக்கு மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், இந்த சீசனில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்களின் சம்பள விவரத்தைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

அதன்படி குக் வித் கோமாளி 4-வது சீசனின் மூலம் குக் ஆக புரமோட் ஆகியுள்ள சிவாங்கிக்கு ஒரு எபிசோடுக்கு ரூ.20 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறதாம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்யலட்சுமி சீரியல் நடித்து பிரபலமான விஜே விஷால், குக்வித் கோமாளி நிகழ்ச்சிக்காக ஒரு எபிசோடுக்கு ரூ. 25 ஆயிரம் சம்பளமாக வாங்கினாராம்.

அதேபோல் வலிமை படத்தில் நடித்து புகழ்பெற்ற ராஜ் அய்யப்பா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு எபிசோடுக்காக ரூ.26 ஆயிரம் சம்பளமாக வாங்கினாராம். அதேபோல் நடிகை விசித்ராவுக்கும் ஒரு எபிசோடுக்கு ரூ.30 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாம். நடிகை ஷெரினுக்கு ஒரு எபிசோடுக்கு ரூ.35 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறதாம்.

எஞ்சியுள்ள நடிகை சிருஷ்டி டாங்கே மற்றும் ஆண்ட்ரியன் ஆகியோருக்கு ஒரு எபிசோடுக்கு தலா ரூ.30 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த சீசனிலேயே அதிக சம்பளம் வாங்கும் குக் என்றால் அது மைம் கோபி தானாம். அவருக்கு ஒரு எபிசோடுக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts

Leave a Comment