குக் வித் கோமாளியை காப்பியடிக்கும் சன் டிவி… ‘டாப் குக் டூப் குக்’ நிகழ்ச்சியில் வடிவேலு!

by Editor News

பல வருடங்களாக சினிமாவை விட்டு விலகியிருந்த வடிவேலு மாமன்னன் திரைப்படம் மூலமாக ரி எண்ட்ரி கொடுத்தார். மாமன்னன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்றது. படத்தில் நடித்த வடிவேலு மற்றும் ஃபஹத் பாசில் ஆகிய இருவரின் நடிப்பும் வெகுவாகப் பாராட்டப்பட்டது.

இதையடுத்து இப்போது வடிவேலு சில படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்நிலையில் சன் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாக இருக்கும் டாப்பு குக் டூப் குக் என்ற சமையல் சம்மந்தப்பட்ட ரியாலிட்டி நிகழ்ச்சியில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளப் போவதாக சொல்லப்படுகிறது.

இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தழுவலாக உருவாக இருக்கிறது. குக் வித் கோமாளியில் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட்தான் இந்த நிகழ்ச்சிக்கும் நடுவராக இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கான கவனத்தை ஈர்ப்பதற்காக வடிவேலுவை இதில் அங்கமாக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Related Posts

Leave a Comment