பிக் பாஸில் 50 வது நாளில் மற்றொரு வைல்கார்டு என்ட்ரி…. யார் அந்த பிரபலம் தெரியுமா?

by Column Editor
0 comment

இன்றைய தினம் பிக்பாஸ் சீசன் 50 வது நாளை தொடுகிறது.

இதனை முன்னிட்டு இரண்டாவது வைல்கார்டு என்ட்ரியாக மற்றொரு பிரபலம் பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக அனுப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் அவர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது ஏற்கனவே பல தகவல்கள் உறுதி செய்ததை போல் விஜய்யின் நண்பர் சஞ்சீவ் உள்ளே செல்வதற்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

அதே சமயம், ஏற்கனவே முதல் வைல்கார்டு என்ட்ரியாக ஆண் போட்டியாளர் ஒருவர் அனுப்பப்பட்டுள்ளதால், இரண்டாவது வைல்கார்டு என்ட்ரியாக பெண் போட்டியாளர் ஒருவர் அனுப்பப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இரண்டாவது டைல்கார்டு என்ட்ரியாக நமிதா மாரிமுத்து அல்லது ஷாலு ஷம்மு அனுப்பப்படலாம் என கூறப்படுகிறது.

இருந்தாலும் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்ற பிக்பாஸ் டயலாக்கிற்கு ஏற்ற மாதிரி புதிய ட்விஸ்ட் ஏதாவது இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எப்படி இருந்தாலும் 50 வது நாளான இன்று ஒரு சஸ்பென்ஸ் காத்திருக்கிறது என்பது மட்டும் உறுதியாகி உள்ளது.

Related Posts

Leave a Comment