தன்னிடம் ஆணுறை கேட்டாரா……..அசீம்…..?- உண்மையை மறைக்காமல் கூறிய ஷெரின்.

by Lifestyle Editor

பிக்பாஸ் சீசன் 6 இன்றுடன் நிறைவடைகிறது. பொதுவாக பிக்பாஸ் என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது, அந்த வகையில் இந்த சீசன் சற்று பரபரப்பாகவே சென்றது. தொடர்ந்து இந்த சீசனின் இறுதியில் அசீம், விக்ரமன், ஷிவின் ஆகிய மூவர் உள்ளனர் இதில் யார் டைட்டிலை தட்டி செல்ல போகிறார் என இன்று முடிவாகிவிடும்.

நிலைமை இப்படி இருக்க நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய போட்டியாளர்களிடம் ரசிகர்கள் கேள்விகளை கேட்பது வழக்கம். அந்த வகையில் ஷெரினிடம் நெட்டிசன் ஒருவர் கேட்ட கேள்வி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பிக்பாஸ் வீட்டுக்குள் ரீஎண்ரி கொடுத்த ஷெரினிடம் “காதலனை பார்க்க வரும்போது ஆணுறை கொண்டு வரவில்லையா?” என அசீம் கேட்டதாகவும், அதில் ‘க’ என்ற சப்தம் மட்டும் ஒலித்து பின் பீப் செய்து விட்டதாகவும் கூறி ஒருவர் கேள்வி எழுப்ப, இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் பரவியது.

நெட்டிசனின் இந்த கேள்விக்கு பதிலளித்த ஷெரின் “தன்னிடம் அசீம் சிகரெட் கொண்டு வரவில்லையா என்றுதான் கேட்டார், அவர் காதலி என்கிற வார்த்தையையும் சேர்த்து கூறியதால் தான், நான் என் காதுகளை மூடினேன், மற்றபடி அவர் என்னிடம் வேறு எதுவும் கேட்கவில்லை” என்று உண்மையை தெளிவாக கூறியிருக்கிறார். தற்போது இது தொடர்பான ஸ்க்ரீன் ஷாட்டை அசீம் ரசிகர்கள் இணையதளங்களில் பகிர்ந்து அசீம் மீது எந்த தவறும் இல்லை என்று கூறி அவருக்கு ஆதரவாக பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

Related Posts

Leave a Comment