கமலுக்கு பதிலாக களமிறங்கிய ராஜமாதா.. பிக் பாஸ் செட்டில் பரபரப்பு..

by Column Editor

பிக் பாஸ் தெலுங்கு சீசன் 3 இன் முக்கிய தொகுப்பாளரான நாகார்ஜுனா வெளிநாடு சென்றிருந்தபோது வார இறுதி எபிசோட்களை ரம்யாகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். இதன் பொருட்டே பிக் பாஸ் தயாரிப்பு நிறுவனம் ரம்யாகிருஷ்ணனை கமலுக்கு பதில் தேர்ந்தெடுத்துள்ளதாக சொல்லபப்டுகிறது.

பட்டி தொட்டியெல்லாம் பிரபலமான பிக் பாஸ் இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ளது. தற்போது 5-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த 5 சீசன்களையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி உள்ளார். நிகழ்ச்சி நடைபெறும் 100 நாட்களில் ஒவ்வொரு வாரத்தின் இறுதி நாட்கள் மட்டும் கமல்ஹாசன் கலந்துகொள்வார்.

இதற்கிடையே இந்தியன், விக்ரம் என படப்பிடிப்புகளில் பிஸியாக இருக்கும் கமல் கடந்த வாரம் அமெரிக்கா சென்று வந்த கையோடு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். இதற்குபின் அவருக்கு லேசான இருமல் இருந்துள்ளது. இதையடுத்து பரிசோதனை செய்ததில் கமலுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் கமல்.

இதனால் கமலுக்கு பதில் பிக் பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்கப்போகிறார் என்னும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தொற்றிக்கொண்டது. ஆனால் கமல் தன்னுடைய ரோலை யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டார் எனவே அவரே காணொளி வாயிலாக தொகுத்து வழங்குவார் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று ஒளிபரப்பாக உள்ள எபிஷோடுக்க போடப்பட்டுள்ள செட்டிற்குள் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்துள்ளார் ரம்யாகிருஷ்ணன். இதனால் ஒரு நொடி செட்டே பரபரப்பில் ஆழ்ந்துள்ளது. ஆக இந்த வார எபிசோட் ரம்யாகிருஷ்ணனுடன் தான் என்பது உறுதியாகிவிட்டது. ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் தனது அதிரடி கமெண்டுகளால் போட்டியாளர்களை அலற விட்டு வரும் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் இந்த வார எபிசோட் செம சூடாக இருக்கப்போகிறது என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஏற்கனவே பிக் பாஸ் தெலுங்கு சீசன் 3 இன் முக்கிய தொகுப்பாளரான நாகார்ஜுனா வெளிநாடு சென்றிருந்தபோது வார இறுதி எபிசோட்களை ரம்யாகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். இதன் பொருட்டே பிக் பாஸ் தயாரிப்பு நிறுவனம் ரம்யாகிருஷ்ணனை கமலுக்கு பதில் தேர்ந்தெடுத்துள்ளதாக சொல்லபப்டுகிறது.

Related Posts

Leave a Comment