முன்பதிவில் வெளிநாட்டில் அதிகம் புக் ஆனது வாரிசா, துணிவா?- வெளிவந்த விவரம்

by Lifestyle Editor

அடுத்த வருடம் பொங்கலுக்கு படு மாஸாக வெளியாக இருக்கிறது விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு. தமிழகத்தின் இரண்டு பெரிய நடிகர்களான இவர்களது படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆவதை காணவே ரசிகர்கள் படு ஆர்வத்தில் உள்ளார்கள்.

போனி கபூரின் தயாரிப்பிலும் வினோத்தின் இயக்கத்திலும் உருவாகியுள்ள அஜித்தின் துணிவு படம் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் படம் இருக்கும் என கூறப்படுகிறது.

தெலுங்கு பட இயக்குனர் வம்சி மற்றும் தயாரிப்பாளர் தில் ராஜு கூட்டணியில் விஜய் நடித்திருக்கும் வாரிசு திரைப்படம் சென்டிமென்ட் கலந்த குடும்ப கதையாக இருக்கும் என படக்குழு அறிவித்துள்ளார்கள்.

முன்பதிவு :

படம் பொங்கல் ரிலீஸ் என அறிவித்ததில் இருந்து வெளிநாடுகளில் முன்பதிவு தொடங்கிவிட்டது. அதன்படி UKவில் இரண்டு படங்களுக்கான முன்பதிவு கேவமாக நடக்க வாரிசு படத்திற்கு அதிக புக்கிங் நடந்துள்ளது. வாரிசு 3760 டிக்கெட்டுகளும், துணிவு 925 டிக்கெட்டுகளும் விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Posts

Leave a Comment