அச்சோ.. என்னாச்சு! கதறி அழுதபடி பிக்பாஸ் தனலட்சுமி வெளியிட்ட வீடியோ!!

by Lifestyle Editor

விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் ஏராளமான ரசிகர்களை பெற்று பிரபலமாக உள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் தனலட்சுமி. அவர் டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான வீடியோக்களை வெளியிட்டு பிரபலமடைந்தவர். மேலும் குறும்படங்களிலும் நடித்துள்ளார். தனலட்சுமி பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது தனது சில செயல்களால் ரசிகர்களின் விமர்சனத்திற்கு ஆளானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்புடன் இருந்த தனலட்சுமிக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கதறி அழுதபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதற்கு கேப்ஷனாக முதலில் அவர் வாழ்க்கையின் முடிவு மரணம். ஓம் நமசிவாய என எழுதியிருந்துள்ளார். இந்நிலையில் தனலட்சுமிக்கு என்ன பிரச்சனை? என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர். மேலும் அவருக்கு ஆறுதல் கூறியும் வருகின்றனர்.

Related Posts

Leave a Comment