சரியான வில்லி பிரியங்கா… கண்ணாடியாக மாறி பேசும் தாமரை !

by Column Editor

பிக்பாஸ் வீட்டில் சரியான வில்லியாக மாறி செயல்படுகிறார் பிரியங்கா என்று தாமரை கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இன்று சனிக்கிழமை என்பதால் போட்டியாளர்களிடம் வழக்கம்போல் பேசி வருகிறார் கமல். அந்த வகையில் பிரியங்காவிம் பேசும் அவர், உள்ளது உள்ளபடி காட்டும் கண்ணாடி என்ற டாஸ்க் விளையாடும்போது விட்டுக்கொடுத்து விட்டீர்களா அல்லது வேரேதேனும் தந்திரம் இருக்கா என்று கேட்கிறார். அதற்கு பதிலளிக்கும் பிரியங்கா, இல்லைவே இல்லை என்கிறார். அப்போது குறுக்கிடும் தாமரை, எனக்கும் பாசமெல்லாம் இருக்கு. ஆனால் அந்த டாஸ்க்கில் அவங்க இருந்த இடத்தில் நான் இருந்தால் வேற மாதிரி இருந்திருக்கும் என்று சொல்ல, எப்படி இருக்கும் என்று பண்ணிக்காட்டுங்க என்று கமல் கேட்கிறார். இதற்கு சக போட்டியாளர்கள் கைத்தட்டி வரவேற்கின்றனர்.

இதைத்தொடர்ந்து கமல் முன்னிலையில், உள்ளது உள்ளபடி காட்டும் கண்ணாடி டாஸ்க்கில் தாமரை மற்றும் பிரியங்கா விளையாடுகின்றனர். அப்போது பேசும் தாமரை, அபிஷேக் உள்ளிட்ட சில பேரிடம் அன்பாக பிரியங்கா இருந்தீங்க. நான் உங்க மேல அன்பாக இருந்தேன். நீங்க என் மேல பாசமா இருந்தீங்களா என்று தெரியவில்லை. ஆனால் சரியாக வில்லியாக இருந்தீங்க மட்டும் தெரிஞ்சிது என்று கூறும்போது, பிரியங்கா முகம் சிவக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment