போலீஸ் – திருடர்களாக மாறிய ஹவுஸ்மேட்டுகள்.. அடித்துக்கொள்ளும் ப்ரோமோ வெளியீடு !

by Column Editor

ஹவுஸ்மேட்டுகள் போலீஸ் மற்றும் திருடர்களாக மாறி புதிய டாஸ்க்கில் விளையாடி வரும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கி இரண்டாவது வாரத்தில் சென்றுக்கொண்டிருக்கிறது. கடந்த வாரத்தை போல் இந்த வாரமும் புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டு ஹவுஸ்மேட்டுகள் விளையாடி வருகின்றனர். இந்த டாஸ்க்கின்போது போட்டியாளர்கள் அடித்துக் கொள்கின்றனர். இதனால் இந்த நிகழ்ச்சி சுவாரஸ்யமாக சென்றுக்கொண்டிருக்கிறது.

களவாணியும், காவல்துறையும் என்ற புதிய டாஸ்க் இன்று கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி பிக்பாஸ் வீட்டில் பாதி காவல்துறைக்கும், மீதியுள்ள பாதி களவாணிக்கும் என பிரிகிறது. இதையடுத்து ஹவுஸ்மேட்டுகள் களவாணியாகவும், காவல்துறையாகவும் பிரிந்து புதிய டாஸ்க்கை விளையாடுக்கின்றனர். இதில் வனிதா, சுஜாவருணி, அனிதா சம்பத், டாடி பாலாஜி உள்ளிட்டோர் போலீசாக செயல்படுகின்றனர்.

அதேநேரம் பாலாஜி முருகதாஸ், அபினய், சினேகன், அபிராமி உள்ளிட்டோர் திருடர்களாக இருக்கின்றனர். இந்த டாஸ்க்கில் விளையாடும்போது பாலாஜி முருகதாஸ் திருடி செல்கிறார். இதை பார்த்த போலீஸ் அவரை பிடிக்க முயற்சித்த போது பாலாஜி முருகதாஸ் கீழே விழுகிறார். பின்னர் பாலாஜி முருகதாஸை ஜெயிலில் அடைக்கின்றனர். இதையடுத்து போலீஸ், திருடர்கள் இடையே நடக்கும் சண்டைகளின் காட்சிகள் வெளியாகி உள்ளது.

Related Posts

Leave a Comment