கூட்டணியில் நாமினேட் செய்யப்பட்ட அந்தவொரு போட்டியாளர்..

by Lifestyle Editor

நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.

இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ்,யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்‌ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ், இந்த சீசனில் வீட்டிற்குள்ளே பல மாற்றங்களை செய்துள்ளது.

இதனை தொடர்ந்து கடந்த வாரம் கூல் சுரேஷ் மற்றும் அனன்யா ஆகிய இருவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நாமினேஷனில் சிக்கிய போட்டியாளர்கள் :

இந்த நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேட் செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளது.

அதில், ரவீனா, விக்ரம், விசித்திரா, தினேஷ் ஆகிய நால்வரின் பெயர்கள் அதிகமாக அடிப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருந்தால் கண்டிப்பாக விக்ரம், ரவீனா ஆகிய இருவரும் வெளியேறுவார் என போட்டியாளர்கள் உட்பட ரசிகர்களும் எதிர்வு கூறியுள்ளனர்.

மேலும் இவ்வளவு நாள் பொறுமையாக இருந்த விஷ்ணு இந்த வாரம் முதல் நன்றாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இப்படியாக இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ முடிவடைந்துள்ளது.

Related Posts

Leave a Comment