கர்ப்பிணிகள் இந்த உணவுகளை ஒருபோதும் தொடவே கூடாது..!

by Lifestyle Editor

தாய்க்கு ஆரோக்கியமாக கருதப்படும் உணவுகள் சில குழந்தைக்கு பாதிப்பை உண்டாக்கலாம். எனவே, இந்த பதிவில் கர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

சமைக்கப்படாத மற்றும் பாதி அளவு சமைக்கப்பட்ட உணவுகள்

ஆட்டு இறைச்சி, மீன், முளைகட்டிய பயிர்கள் போன்ற பல உணவுகளை பச்சையாகவோ அல்லது அரைவேக்காடாகவோ சாப்பிடுவது பாராசிட்டிக் அல்லது பாக்டீரியல் தொற்றுகள் ஏற்படுவதற்கு வழிவகுக்கும். இந்த பாக்டீரியா குழந்தை மற்றும் தாயை பாதித்து இதன் காரணமாக கரு கலைப்பு, குறைப்பிரசவம் அல்லது குழந்தையின் வளர்ச்சியில் பிரச்சனைகள் ஏற்படுத்தலாம்.

அதிக மெர்குரி நிறைந்த இறைச்சி

கர்ப்பிணி பெண்கள் தங்களது உணவில் மீன்களை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது என்றாலும் கூட மெர்குரி அளவு அதிகமாக இருக்கக்கூடிய உணவுகளை அதிகம் சாப்பிட கூடாது. இந்த வகையான மீன்களை கர்ப்ப காலத்தில் சாப்பிடுவது குழந்தையின் நரம்பு மண்டல வளர்ச்சியை பாதிக்கலாம். எனவே வஞ்சரம், இறால் போன்ற குறைந்த மெர்குரி அளவு கொண்ட மீன்களை சாப்பிடுவது நல்லது.

பேஸ்ட்சுரைஸ் செய்யப்படாத பால் சார் பொருட்கள்

கர்ப்பிணி பெண்கள் காய்ச்சாத பால், தயிர் மற்றும் சீஸ் போன்ற பேஸ்ட்சுரைஸ் செய்யப்படாத பால் பொருட்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இந்த பொருட்களில் காணப்படும் லிஸ்டெரியா மோனோசைட்டோஜீன்ஸ் என்ற மோசமான பாக்டீரியா உடல் நல குறைவு ஏற்படுத்தலாம் அல்லது கரு கலைந்து போக காரணமாக இருக்கலாம்.

ஆரோக்கியமான உணவு, ஆரோக்கியமான வாழ்க்கை முறை!

கர்ப்பத்திற்கு முயற்சிக்கும் பெண்கள், கர்ப்பிணி பெண்கள் அல்லது தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் எப்பொழுதும் ஆரோக்கியமான உணவை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். எனினும் ஒரு சில உணவுகள் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதால் அந்த உணவுகள் என்னென்ன என்பதை தெரிந்து கொண்டு அவற்றை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. மகப்பேறு மருத்துவர் அல்லது சான்றிதழ் பெற்ற உணவு நிபுணரை அணுகி கர்ப்பகால உணவு குறித்த ஆலோசனைகளை பெற்று கொள்ளலாம்.

Related Posts

Leave a Comment