கோடையின் அதிக வெப்பம் விந்தணுக்களை பாதிக்கும்.. தவிர்ப்பது எப்படி..

by Lifestyle Editor

விந்தணுக்களை வெப்பநிலை பாதிக்குமா என்பது குறித்து ஆய்வு சொல்வது என்ன?​

விலங்குகளில் வெப்ப அழுத்தம் உடலின் ஒரு பகுதியை மட்டும் அல்ல முழு உடலிலும் பரவுகிறது. எனினும் வெப்ப விளைவு ஒரு குறிப்பிட்ட உறுப்பு அல்லது உடற்கூறியல் பகுதியை தொடர்பு கொண்டிருக்கலாம். விந்தணுக்கள் உருவாக்கத்தின் போது உடல் வெப்பநிலையை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கும். 2020 ஆம் ஆண்டின் ஸ்க்ரோடல் வெப்பமயமாதல் எதிர்கொண்ட மனிதர்களில் வெப்ப அழுத்தமானது டெஸ்டிகுலர் திசு வெப்பநிலையை அதிகரித்தது. இதனால் விந்தணுக்களின் இயக்கம் மற்றும் செறிவு குறைப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இதனால் விந்தணுக்களின் இயக்கம் மற்றும் நம்பகத்தன்மையை வெப்ப அழுத்தம் குறைத்து விந்தணுக்களை சேதப்படுத்துகிறது என்று காட்டப்பட்டது.

​அதிக வெப்பம் எப்படி ஆண் மலட்டுத்தன்மையை அதிகரிக்கிறது?​

ஆண்களுக்கு டெஸ்டிகுலர் வெப்பநிலையில் ஒவ்வொரு டிகிரி செல்சியஸ் அதிகரிப்பும் விந்தணு உருவாக்கத்தில் 14% குறைவதற்கு வழிவகுக்கிறது என்று ஆய்வு காட்டியுள்ளது. குறைந்த மைட்டோகாண்ட்ரியல் செயல்பாடு மற்றும் ஏடிபி தொகுப்பு சுற்றுப்புற வெப்பநிலை விந்தணு இயக்கத்தை வெகுவாக குறைப்பதால் திசுக்கள் சூடான அழுத்தம் டின்ஏ சேதம் ஏற்படுத்தி apoptosis ( உயிரணு மரணம்- ஒரு கலத்தில் தொடர்ச்சியான மூலக்கூறு படிகள் அதன் மரணத்துக்கு வழிவகுக்கும். உடலில் அசாதாரண செல்களை அகற்ற உடல் பயன்படுத்தும் ஒரு முறை இது. இந்த செயல்முறை தடுக்கலாம்) மேலும் டிஎன்ஏவில் உள்ள சேதமடைந்த விந்தணுக்கள் ஆண் மலட்டுத்தன்மைக்கு வழிவகுக்கும். இந்த வெப்ப அழுத்தமானது டெஸ்டிகுலர் திசுவை பாதித்து, விந்தணுக்களின் தரத்தை குறைத்து மலட்டுத்தன்மை அபாயத்தை அதிகரிக்கும்.

அதிக வெப்பம் விந்தணுக்களை எப்படி பாதிக்கிறது?

விந்தணு உற்பத்தி அதிக வெப்பநிலை விந்தணு உற்பத்தியை பாதிப்பது போன்று விந்தணுக்கள் எண்ணிக்கை குறையவும் காரணமாகிறது. குறைந்த விந்தணுக்கள் கருவுறுதலை கடினமாக்கும்.
விந்தணுக்களின் இயக்கம் – கருவுறுதலுக்கு முட்டையை அடையும் விந்தணுவின் திறன் வெப்பத்தால் பாதிக்கப்படலாம். இது வெற்றிகரமான கருத்தரிக்கும் வாய்ப்பை குறைக்கிறது.
விந்தணுக்களின் உருவவியல் – வெப்ப அழுத்தம் அசாதாரண விந்தணு உருவமைப்புக்கு வழிவகுக்கும். இது வடிவத்தில் மாற்றம் உண்டு செய்யும்.

அதிக வெப்பம் விந்தணுக்களை பாதிக்காமல் இருக்க நீரேற்றம் அவசியம்​ :

நீரிழப்பு உங்கள் பிஹெச் அளவை மாற்றி ஹார்மோன் அளவை மோசமாக பாதிக்கும். உடலில் திரவம் குறைவாக இருப்பதல் விந்து பிசுபிசுப்பு மற்றும் விந்தணு எண்ணிக்கை கணிசமாக குறைகிறது. நீரேற்றமாக இருப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கு முக்கியமானது. கருவுறுதலுக்கும் நீரேற்றம் மிகவும் அவசியம். நாள் ஒன்றுக்கு 8-10 டம்ளர் நீர் குடிப்பது ஆரோக்கியமான உடல் செயல்பாடுகளுக்கு நல்லது. உடல் வெப்பநிலையும் கட்டுக்குள் வைக்க செய்யும்.

அதிக வெப்பம் விந்தணுக்களை பாதிக்காமல் இருக்க இறுக்கமான ஆடைகளை தவிர்க்கவும்​ :

கோடையில் நீரிழப்பு, அதிக வியர்வை, அதிக வெப்பம் போன்றவற்றுக்கான ஆபத்து அதிகம். இந்நிலையில் ஆடைகள் கனமாக, கடினமாக இருப்பது விதைப்பையின் வெப்பநிலையை மேலும் அதிகரிக்கலாம். ஏனெனில் கனமான அல்லது நைலான் ஆடைகள் வியர்வையை உறிஞ்சாது. இது காற்று சுழற்சியை அனுமதிக்காது. வெப்பத்தை திசை திருப்பும். தளர்வான ஆடைகளை அணிவது வெப்பத்திலிருந்து பாதுகாக்கும். வியர்வை உறிஞ்சுதலை மேம்படுத்தும்.

​லேப்டாப் பயன்படுத்தும் ஆண்கள் விந்தணுக்கள் பாதிக்காமல் இருக்க என்ன செய்வது?​

பெரும்பாலான ஆண்கள் லேப்டாப் மடியில் வைத்துகொண்டு வேலை செய்கிறார்கள். இது இடுப்பு பகுதியில் வெப்பத்தை அதிகரிக்கும். ஆண்கள் லேப் டாப் மடியில் வைத்து பயன்படுத்தும் போது விந்து தரம் குறைவதை ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. எப்போதும் மடிக்கணினியை மேசை மீது வைத்து படுக்கவும். தவிர்க்க முடியாத நிலையில் லேப் டாப் மடியில் வைப்பதாக இருந்தால் இடையில் ஒரு தடிமனான தலையணையை வைத்து பயன்படுத்தவும். இதனால் அதிக வெப்பத்தை உணர மாட்டீர்கள்.

கோடைக்காலத்தில் சூடான நீர் குளியல் தவிர்க்க வேண்டும்?​

சூடான தொட்டிகளில் சூடான நீரில் குளிப்பது விதைப்பை வெப்பத்துக்கு வெளிப்படுத்துகிறது. இது ஆண்களில் விந்து அளவுகளை குறைக்கிறது. சாதாரண உடல் வெப்பநிலையான 98.6 டிகிரியை விட விரைகள் குறைந்தது 3.5 டிகிரி குளிர்ச்சியாக இருக்க வேண்டும். 95 டிகிரிக்கு குறைவான வெப்பநிலை விரைகளுக்கு உகந்ததாக இருக்கும். இவையெல்லாம் சாதாரண விஷயங்களாக இருந்தாலும் இதை கடைப்பிடிப்பது விந்தணுக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க செய்யும்.

Related Posts

Leave a Comment