ஆண்மை குறைபாடு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் மற்றும் அறிகுறிகள்..

by Lifestyle Editor

பொதுவாக ஆண்மை குறைபாடு என்பது இரண்டு வகைப்படும். ஓன்று உங்கள் விந்தணுவின் திறன் மற்றொன்று உங்கள் விந்தணுவின் எண்ணிக்கை. ஒரு ஆண் ஆண்மையுடன் செயல்பட வேண்டுமெனில் இவை இரண்டும் மிக முக்கியம்.

ஹார்மோன் மாற்றங்கள் அல்லது ஹார்மோன்களில் ஏற்படும் இடையூறு காரணமாக ஆண்மை குறைபாடு ஏற்படுகிறது. மேலும் உங்கள் உடல் அல்லது மனம் இதில் ஏற்படும் தாக்கங்கள் கூட உங்கள் ஆண்மை குறைவதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.

அதிகப்படியான உடற்பயிற்சி, வெப்பம், சரியான நிலையில் வளராத விதை பைகள் இவைகள் கூட உங்கள் ஆண்மை பறிபோவதற்கு முக்கிய காரணமாக அமையலாம். உங்கள் உடலில் ஏற்படும் ஒருவித மாற்றங்களை வைத்து உங்களுக்கு ஆண்மை குறைபாடு உள்ளது என்பதை கண்டறிய முடியும்.

உங்கள் தலை முடியில் ஏற்படும் மாற்றங்கள் வைத்துக்கூட உங்களுக்கு ஆண்மை குறைபாடு உள்ளது என்பதை அறிய முடியும். அதிகமாக முடி கொடுத்தால், முடி மெலிந்து வலுவிழந்து போவது கூட ஆண்மை குறைபாடு உள்ளத்திற்கான ஒரு அறிகுறிதான்.

மேலும் உடலுறவில் நாட்டம் இல்லாமல் போவது, உடலுறவு சார்ந்த விஷயங்களில் அக்கறை குறைவது கூட ஒருவிதமான அறிகுறிதான். விதை பையில் வலி, கட்டி அல்லது வீக்கம் ஏற்படுவதும் ஆண்மை குறைபாடு ஏற்படுவதற்கான ஒரு அறிகுறியாக அறியப்படுகிறது.

Related Posts

Leave a Comment