ஜனனி தங்கையின் காதல் என்னவாகும்?

by Lifestyle Editor

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.

பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.

குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்பு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்த அவருக்கு பதில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகின்றார்.

நீண்ட நாட்களாக சுவாரசியமில்லாமல் சென்ற சீரியலை தற்போது கதிர் டிஆர்பி- எகிற வைத்துள்ளார். கதிர் மட்டுமின்றி ஞானம் இருவரும் அண்ணனுக்கு எதிராக மாறியுள்ளனர்.

தர்ஷினி குணசேகரன் வீட்டில் இருக்கும் நிலையில், அவரை திருமணம் செய்ய கரிகாலன் ஆசைப்பட்டார். இறுதியில் சண்டை ஏற்பட்டு திருமணம் தடைபட்டுள்ளது.

இதனிடையே காட்டில் கத்துக்குத்து பட்ட ஜீவானந்தம் என்ன ஆனார் என்பது தெரியாமல் கதை செல்கின்றது.

தற்போது ஜனனியின் தங்கை காதலில் விழுந்துள்ளார். அதாவது ஜனனியின் அத்தை மகனை தான் காதலித்து வரும் நிலையில், அந்த பையனை தர்ஷினிக்கு திருமணம் முடிக்கவும் பேசியுள்ளார்.

இந்நிலையில் ஜனனி குணசேகரன் வீட்டில் சவால் விட்டுள்ளார். ஆக மொத்தம் கரிகாலன், ஆதிரை திருமணம் போன்று இதுவும் ஒரு பிரச்சினையில் செல்கின்றது.

Related Posts

Leave a Comment