தர்ஷினியின் கல்யாணத்தில் ட்விஸ்ட்.! உமையாளுக்கு விழும் பெருத்த அடி

by Lifestyle Editor

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.

பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.

குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்பு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்த அவருக்கு பதில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகின்றார்.

நீண்ட நாட்களாக சுவாரசியமில்லாமல் சென்ற சீரியலை தற்போது கதிர் டிஆர்பி- எகிற வைத்துள்ளார். கதிர் மட்டுமின்றி ஞானம் இருவரும் அண்ணனுக்கு எதிராக மாறியுள்ளனர்.

தர்ஷினிக்கும் சித்தார்த்திற்கும் திருமணம் செய்து வைக்க குணசேகரன் மற்றும் உமையாள் இருவரும் திட்டம் போட்டுள்ள நிலையில், அதனை நிறுத்த ஈஸ்வரி மகளின் வாழ்க்கையை காப்பாற்ற போராடி வருகின்றார்.

நிச்சயதார்த்தம் என்று நினைத்த நிலையில், அதனை கல்யாணமாக செய்துவிட திட்டமிட்ட நிலையில், கதிர் தனது பாணியில் திட்டம் ஒன்றினை போட்டுள்ளார்.

தற்போது தர்ஷினி அப்பாவாக நினைக்கும் குணசேகரன் தான் தர்ஷினியின் திருமணத்தை நிறுத்தப் போகின்றார். இதுவரை அனைத்து விடயத்திலும் வெற்றியை மட்டுமே அவதானித்த முதன்முதறையாக தலைகுனிய போகின்றார்.

இந்த ஒரு விடயத்தை வைத்து தான் மக்களின் பேராதரவை பெற வேண்டும் என்று மொத்த டீமும் இதற்கு வேலை செய்து கொண்டிருக்கின்றதாம்.

தர்ஷினி திருமணத்தில் தரமான ட்விஸ்ட் இருக்கும் நிலையில், குறித்த திருமண மண்டபத்தில் அஞ்சனாவிற்கும், சித்தார்த்திற்கும் சிறப்பாக திருமணம் நடைபெற உள்ளதால் ரசிகர்கள் குஷியில் இருக்கின்றனர்.

Related Posts

Leave a Comment