உச்சத்தை தொட்ட தங்கம் விலை.. ஒரு சவரன் இவ்வளவா?

by Lifestyle Editor

சென்னையில் நேற்று முன் தினம் மார்ச் 30ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.

அதன்படி இன்று ஏப்ரல் 1ஆம் தேதி 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் ரூ6,455க்கும், சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.51,640க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,288க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.42,304க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.81.60க்கும் , ஒரு கிலோ வெள்ளி ரூ.81,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

Leave a Comment