சென்செக்ஸ் 848 புள்ளிகள் உயர்ந்துது…

by Column Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 848 புள்ளிகள் உயர்ந்தது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். வளர்ச்சியை கருத்தில் கொண்டு பல்வேறு துறைகளுக்கு சாதகமாக அறிவிப்புகள் மத்திய பட்ஜெட்டில் வெளியானது. இது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டாடா ஸ்டீல் மற்றும் சன்பார்மா உள்பட மொத்தம் 23 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், மகிந்திரா அண்டு மகிந்திரா மற்றும் பவர் கிரிட் உள்பட மொத்தம் 7 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,761 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,586 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 102 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தைமதிப்பு ரூ.267.47 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.3.06 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 848.40 புள்ளிகள் உயர்ந்து 58,862.57 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 237.00 புள்ளிகள் ஏற்றம் கண்டு 17,576.85 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment