ஃபிரிட்ஜில் வைக்கவே கூடாத காய்கறிகள்..

by Lifestyle Editor

எல்லா வீட்டு ஃபிரிட்ஜை திறந்தாலும் அதில் தோசை மாவு, காய்கறிகள், பழங்கள், மசாலா பொருள் தான் இருக்கும். அவ்வப்போது தேவைப்படும் காய்கறிகளை வாங்காமல் வாரக்கணக்கில் தேவையான காய்கறிகளை மொத்தமாக வாங்கி ஃபிரிட்ஜில் வைத்து விடுவோம். அப்படி மொத்தமாக வாங்கி ஸ்டோர் செய்வது மிகவும் தவறு. இப்படி நீண்ட நாட்கள் ஸ்டோர் செய்வது, வைக்கக்கூடாத காய்கறிகளை வைப்பது போன்றவற்றால் உடல் ஆரோக்கியத்துக்கே மோசத்தை உண்டாக்கும்.

​வெங்காயம், பூண்டு

வெங்காயம் மற்றும் பூண்டு ஆகிய இரண்டையும் காற்றோட்டமாகவும் ஈரப்பதம் இல்லாத இடத்திலும் ஸ்டோர் செய்ய வேண்டும்.

ஃபிரிட்ஜ் போன்ற குளிர்ச்சியான பகுதிகளில் வெங்காயம், பூண்டை ஸ்டோர் செய்தால் வேகமாக முளைக்க ஆரம்பித்துவிடும். அதிலுள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சிவிடும்.

​குடைமிளகாய்

குடைமிளகாயை ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது என்பதே நம்மில் நிறைய பேருக்குத் தெரியாது. ஆனால் குடைமிளகாயை ஃபரிட்ஜில் வைக்கக் கூடாது.

குடைமிளகாய் குளிர்ச்சியான இடத்தில் இருக்கும். ஆனால் ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாது. ஃபிரிட்ஜில் குடைமிளகாயை வைக்கும்போது அதிலுள்ள அதிகப்படியான குளிர்ச்சி குடைமிளகாயின் கிரிஸ்பினஸைக் குறைத்து அதன் சுவையையும் ஃபிளேவரையுமே மாற்றிவிடும்.

சுச்சுனி

சுச்சுனியும் ஒருவகை நீர்க் காய்கறி தான். இதை சீமை பீர்க்கங்காய் என்று அழைப்பார்கள்.

இதை அதிக குளிர்ச்சியுடைய ஃபிரிட்ஜில் வைக்கும்போது அதிலுள்ள சத்துக்கள் முழுவதும் உறிஞ்சப்பட்டு, அந்த மாய்ஸ்ச்சர் முழுவதும் நீங்கி, பஞ்சு போல மாற்றிவிடும்.

​உருளைக்கிழங்கு

உருளைக் கிழங்கை ரூம் டெம்ப்பரேச்சரில் வைத்து ஸ்டோர் செய்வது தான் சிறந்தது.உருளைக்கிழங்கை ஃபிரி்ட்ஜில் ஸ்டோர் செய்தால் அதிலுள்ள ஸ்டார்ச் அனைத்தும் சர்க்கரையாக மாற்றிவிடும்.

உருளைக்கிழங்கின் தன்மை மாறுவதோடு அதன் சுவையும் மாறிவிடும். உருளைக்கிழங்கில் இனிப்புத் தன்மையும் கூடிவிடும்.

​தக்காளி

​தக்காளியை காயாக வாங்கி ஃபிரிட்ஜில் வைத்தால் அது இயற்கையாகவே பழுக்காது. இறுகிப் போனது போல மாறிவிடும்.

நன்கு பழுத்த தக்காளி பழத்தை ஃபிரிட்ஜில் வைத்தாலும் அதன் தன்மை, சுவை அத்தனையும் மாறிவிடும். அதிலுள்ள நீர்ச்சத்தை அது உறிஞ்சிவிடும்.

​கத்தரிக்காய்

​கத்தரிக்காய் ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது என்பதே நிறைய பேருக்குத் தெரியாது. ஆனால் கத்தரிக்காயை ஒருபோதும் ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது.

கத்தரிக்காயை குளிர்ச்சியான பகுதியில் வைக்கலாம். ஆனால் ஃபிரிட்ஜ் போன்ற அதிக குளிர்ச்சியுள்ள இடத்தில் வைத்து ஸ்டோர் செய்யக்கூடாது. அப்படி வைக்கும்போது கத்தரிக்காயின் தோல்கள் சேதமடையும். உள்ளிருக்கும் சதைப்பகுதி சக்கை போல நீர்ச்சத்தே இல்லாமல் மாறிவிடும். அதன் ஃபிளேவரும் மாறிவிடும்.

​காளான்

கடையில் வாங்கும்போதும் காளான் ஃபிரிட்ஜில் தான் இருக்கும். வீட்டுக்கு வாங்கி வந்ததும் முதலில் நாம் அதை ஃபிரிட்ஜில் தான் வைப்போம்.

ஆனால் காளானை ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது. குளிர்ச்சியாக ஆனால் ஈரப்பதம் இல்லாத இடத்தில் ஸ்டோர் செய்யலாம். ஆனால் ஃபிரிட்ஜில் வைத்தால் அதன் மாய்ஸ்ச்சர் குறைந்து போய்விடும். அளவிலும் சுருங்க ஆரம்பித்து விடும்.

​ஃபிரஷ்ஷான மூலிகை

பார்சிலி, கொத்தமல்லி இலை, புதினா, பேசில் உள்ளிட்ட ஃபிரஷ்ஷான இலைகள், வாசனை பொருள்கள் மற்றும் மூலிகைகள் ஆகியவற்றை ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது.

ஃபிரிட்ஜில் வைத்தால் அதிலுள்ள மாய்ஸ்ச்சர் குறைவதோடு மூலிகைகளின் வாசனையும் குறைந்து விடும். மல்லி, புதினாவை வாங்கி வேர்க்களை மட்டும் நீக்கிவிட்டு, ஒரு கண்ணாடி பாட்டில் தண்ணீர் ஊற்றி, அடி பாகம் மட்டும் அதற்குள் இருக்கும்படி வைத்து கிச்சனில் ஒரு ஓரமாக வைத்து விடுங்கள். குறைந்தது 3-4 நாட்கள் ஃபிரஷ்ஷாகவே இருக்கும்.

Related Posts

Leave a Comment