சூழ்ச்சி வலையில் சிக்கிய ஆனந்தி- அழகன் காப்பாற்றுவானா?

by Lifestyle Editor

கிராமத்தில் இருந்து வந்த அப்பாவி பெண் ஒருவர் சிக்கல்களை எதிர்கொண்டு எப்படி சாதனை பெண்ணாக மிளர்கிறார் என்பதே சிங்கப்பெண்ணே சீரியலின் மையக்கரு.

கடந்தாண்டு அக்டோபரில் தொடங்கப்பட்ட சிங்கப்பெண்ணே சீரியல் மற்ற சீரியல்களை பின்னுக்கு தள்ளவிட்டு டாப் ரேட்டிங்கில் சென்று கொண்டிருக்கிறது.

சுட்டித்தனமாய் சுற்றித்திரிந்த ஆனந்தி, குடும்ப கஷ்டத்தை உணர்ந்து குடும்பத்துக்காக வேலை செய்து கடனை அடைக்க சென்னைக்கு செல்கிறார்.

அங்கே அவர் எதிர்பார்த்து போன வேலை ஒன்று, ஆனால் கிடைத்ததோ வேறு ஒன்று.

எது எப்படியாக இருந்தாலும் குடும்ப கஷ்டமே முக்கியம் என சொல்லும் அனைத்து வேலைகளையும் செய்கிறார்.

நிறுவனத்தில் உயர்பொறுப்பில் இருப்பவரின் தகாத செயலை தோழிகளுடன் போராடிக் கண்டுபிடிக்க பலரது பாராட்டையும் பெறுகிறார்.

இதனால் ஆனந்தியை பழிவாங்க துடிக்கிறது ஒரு கூட்டம், இது ஒருபுறம் இருக்க தான் காதலிக்கும் மகேஷை ஈர்த்துவிட்டாள் என மித்ராவுக்கு கோபம்.

அவரும் பழிவாங்க துடிக்க தகுந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கிறாள், இதற்கிடையே ஆனந்தியை காதலிக்கும் அன்பு, அழகன் என முகத்தை காட்டாமல் தன்னுடைய காதலை வெளிப்படுத்துகிறார்.

ஒருகட்டத்தில் அழகன் மீது ஆனந்தியும் காதல்கொள்ள யார் என தெரிந்து கொள்ள ஆர்வமுடன் இருக்கிறார்.

இந்நிலையில் நிறுவனத்தின் Silver Jubilee கொண்டாட்டத்தின் போது, ஆனந்திக்கு மயக்க மருந்து கொடுத்து பழிவாங்க திட்டமிடுகிறார் மித்ரா.

இதைக்கடந்து ஆனந்தி வருவாரா? அவரின் உயிரை காப்பாற்றப்போவது யார்? அழகன் யார் என தெரிந்ததும் காதலை ஏற்றுக்கொள்வாரா என பல கேள்விகளுக்கு அடுத்தடுத்த எபிசோட்களில் விடையை பெறலாம்.

Related Posts

Leave a Comment