இன்றைய தங்கம் விலை நிலவரம்..

by Lifestyle Editor

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 46,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஒரு நாள் ஏறுவதும், ஒருநாள் இறங்குவதுமாக இருந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் விலை 46,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 5,825 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஞாயிற்று கிழமையான நேற்று தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. நேற்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை 46,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 5,830 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி ஒரு கிராம் ரூ.77.00க்கும், ஒரு கிலோ ரூ.77,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று தங்கம் விலை எந்தவித மாற்றமும் இன்றி ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆதாவக்து ஆபரண தங்கம் ஒரு சவரன் 46,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கம் ஒரு கிராம் 5,830 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 50 பைசாக்கள் குறைந்து ரூ.76.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related Posts

Leave a Comment