தொப்பையை குறைக்க ஈசியான டிப்ஸ்..

by Lifestyle Editor

சர்க்கரையை முற்றிலும் தவிர்க்கவும் :

தொப்பையை குறைக்க வேண்டுமென்றால், முதலில் சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கிற அனைத்து உணவுகளையும் தவிர்க்க வேண்டும். சர்க்கரை நிறைந்த உணவுகள் மற்றும் பானங்களில் கலோரிகள் அதிகமாக இருப்பதோடு ஊட்டச்சத்தும் குறைவாக இருக்கும். உங்கள் உடலுக்கு தேவைப்படும் ஆற்றலைத் தரும் சர்க்கரையை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது, கூடுதலாக உள்ள சர்கரையை கொழுப்பாக கல்லீரல் மாற்றுகிறது. இதன் காரணமாக அடிவயிறு உள்பட உடலின் உள் உறுப்புகளிலும் கொழுப்பு சேகரமாகிறது.

அதுமட்டுமின்றி, சர்க்கரை சேர்ப்பதால் இன்சுலின் சுரப்பு குறைந்து ரத்த சர்க்கரை அளவு ஏறுகிறது. ஆகையால் சர்க்கரை சேர்க்கப்படாத கலோரி குறைவான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த சரிவிகித உணவை உட்கொள்ளுங்கள்.

உணவில் அதிகமாக சாலடை சேர்த்துக் கொள்ளுங்கள் :

தொப்பையை விரைவாக குறைக்க வேண்டுமென்றால், நீங்கள் சாப்பிடும் உணவில் காய்கறிகளை அவசியம் சேர்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக பச்சை இலை காய்கறிகள், அதிக நார்ச்சத்தும் குறைவான கலோரிகளும் கொண்ட வண்ணமயமான காய்கறிகளை அதிகமாக சாலடில் பயன்படுத்துங்கள். இதிலுள்ள நார்சத்து உங்களுக்கு வயிறு நிறைந்த திருப்தியை கொடுப்பதோடு நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காது.

மேலும் சாலட்டில் வைட்டமின், மினரல், ஆண்டி ஆக்ஸிடெண்ட் போன்றவை உள்ளதால் நமது மெடபாலிஸமும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது.

தினமும் 45 நிமிடம் நடைபயிற்சி செல்லுங்கள் :

தினமும் குறைந்தது 45 நிமிடங்கள் நடைபயிற்சியில் ஈடுபட்டால், உங்கள் உடலில் உள்ள கொழுப்புகள் குறையும். ஏனென்றால் உடலில் சேமித்து வைக்கப்பட்ட கொழுப்புதான் ஆற்றலாக பயன்படுகிறது. இன்னொரு முக்கியமான விஷயம், ஒருபோதும் நடைபயிற்சியை பாதியிலேயே நிறுத்திவிடாதீர்கள். மேலும் நடைபயிற்சி செல்வதால் மன அழுத்தம் குறைகிறது. இந்த எளிமையான உடற்பயிற்சி உங்கள் உடல் எடையை குறைப்பதோடு இதய நலனையும் மேம்படுத்துகிறது.

Related Posts

Leave a Comment