அதிகரித்த பூண்டின் விலை… கிலோ எவ்வளவு தெரியுமா?!

by Lifestyle Editor

தமிழ்நாடு, ராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பூண்டு அதிக அளவில் விளைச்சல் செய்யப்படுகிறது.

குறிப்பாக தமிழ்நாட்டின் நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில இடங்களில் பூண்டு விளைவிக்கப்படுகிறது. அதோடு வட மாநிலங்களில் இருந்தும் தமிழ்நாட்டிற்கு பூண்டு இறக்குமதி செய்யப்படுகிறது.

கோயம்பேடு சந்தையில் தினமும் 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் பூண்டு இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு பூண்டின் விளைச்சல் குறைந்ததால் பூண்டு கிலோ ரூ.350-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் பூண்டின் விளைச்சல் அதிகரித்ததால் பூண்டின் விலை படிப்படியாக குறைந்து கிலோ ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது வட மாநிலங்களில் பூண்டின் விளைச்சல் காலம் முடிவடைந்து அறுவடை தொடங்கியுள்ள நிலையில் பூண்டின் தேவையும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பூண்டின் விலையும் அதிகரித்துள்ளது. பூண்டின் தேவை அதிகரித்துள்ளதால் ஆன்லைன் வியாபாரிகள் பூண்டு பதுக்கலில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதுக்கல் காரணமாக விலையும் அதிகரித்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் முதல்தர பூண்டு 1 கிலோ 250 ரூபாய்க்கும்; இரண்டாம் ரக பூண்டு 200 ரூபாய்க்கும்; மூன்றாம் தர பூண்டு 170 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

Leave a Comment