மாலையுடன் வந்த பாக்கியா… கட்டிப்பிடித்து கட்சி மாறிய ஈஸ்வரி!

by Lifestyle Editor

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னனியில் இருந்து வருகின்றது.

பாக்யாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்துள்ளார்.

கோபி தனது அம்மாவுடன் சேர்ந்து பாக்கியாவிற்கு நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், ராதிகா அவருக்கு சப்போர்ட் செய்து வருகின்றார்.

இந்நிலையில் பாக்கியா பொருட்காட்சியில் சமையல் ஆர்டரை வாங்கி அசத்தி வருகின்றார். மற்றொரு புறம் கோபி பணத்திற்கு கஷ்டப்பட்டு வரும் நிலையில், அம்மா மற்றும் ராதிகாவின் உதவியை பெறவும் மறுத்துவிட்டார்.

பாக்கியாவை அமைச்சர் நேரில் வந்து பாராட்டியுள்ள நிலையில், வீட்டிற்கு மாலையுடன் வந்துள்ளார். இதனை அவதானித்த ஈஸ்வரி பெருமையாக பாக்கியாவை கட்டிப்பிடித்து தனது பாசத்தை வெளிக்காட்டியுள்ளார். இதனை அவதானித்த கோபி வாய் பேச முடியாமல் விழிபிதுங்கி நிற்கின்றார்.

Related Posts

Leave a Comment