171
கிங்ஸ் கிராஸின் பெரும்பாலான சேவைகள் இரத்து செய்யப்படவுள்ள நிலையில், லண்டனின் பேடிங்டன் ரயில் நிலையம் கிறிஸ்மஸ் ஈவ் அன்று மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பேடிங்டன் நிலையம் டிசம்பர் 28 ஆம் திகதி அதாவது அடுத்த வாரம் வியாழக்கிழமை வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்கள் மூடப்பட்டதால் பயணிகளுக்கு இடையூறை ஏற்படும் என் எதிர்பார்க்கப்பட்டாலும் 96 விகிதத்திற்கும் அதிகமான ரயில் நெட்வொர்க் வழக்கம் போல் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
127 மில்லியன் முதலீட்டுப் பணியின் ஒரு பகுதியாக குறித்த நிலையம் மூடப்படுவதாகவும் இதன் மூலம் பயணிகள் சிறந்த சேவைகள் மற்றும் வசதிகளால் பயனடைய முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.