அரசுப் பள்ளி ஆசிரியைகள் சுடிதார் அணியலாம்- அமைச்சர் அன்பில் மகேஷ்

by Column Editor

பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியைகள் விதிகளுக்கு உட்பட்டு சுடிதார் அணிந்து கொள்ளலாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற ‘கனவு ஆசிரியர் விருது’ வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநில அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மதிவேந்தன் ஆகியோர், ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினர்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் பெண் ஆசிரியைகள் சுடிதார் அணியலாம். ஆசிரியைகள் தங்கள் விருப்பப்படி, விதிகளுக்கு உட்பட்டு புடவை அல்லது சுடிதார் அணியலாம். அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் இல்லை. நமது பெருமையின் அடையாளம் என்ற வகையில் பல்வேறு பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறோம்” என்றார்.

Related Posts

Leave a Comment