இன்றைய ராசி பலன்(20-12-23)

by Lifestyle Editor

மேஷம்

உங்கள் வாழ்க்கை துணையிடமிருந்து இன்று நீங்கள் வழிகாட்டுதலை பெறுவீர்கள். இருவருக்குள்ளும் இருக்கும் தொடர்பு இன்னும் ஆழமாகும். இன்று எந்த அச்சம் மற்றும் தயக்கங்கள் உங்களுக்குள் இருக்க வேண்டாம். கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களை பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கையில் உரிய அங்கீகாரம் மற்றும் முன்னேற்றம் கிடைக்கும்.

ரிஷபம்

உறவுகளுக்குள் இருக்கும் வேறுபாடுகளை மறந்து ஒருமையை வளர்க்க முக்கியத்துவம் கொடுங்கள். காதல் உறவில் உள்ளவர்களுக்கு இன்று சிறந்த நாள். இன்று அலுவலக வேலைகளில் அர்ப்பணிப்புடன் செயல்படுவது நன்மைகளை அளிக்கும்.

மிதுனம்

உறவுகளுக்குள் இன்று நீங்கள் எதிர்பார்ப்புகளை தவிர்க்க வேண்டும், இல்லை என்றால் ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். உங்கள் வாழ்வில் இன்று திருப்புமுனை இருக்கலாம். உங்களுக்கு கிடைக்கும் புதிய வாய்ப்புகள் மற்றும் தோன்றும் புதிய யோசனைகள் உங்கள் எதிர்கால வெற்றிக்கு வழிவகுக்கும்.

கடகம்

உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் வெளிப்படையாக மற்றும் நேர்மையாக இருங்கள். இது உறவுகளுக்குள் ஆழமான இணைப்பு மற்றும் புரிதலை வளர்க்கிறது. உங்கள் தொழில் அல்லது பணியிடத்தில் பொறுமையையும், விடாமுயற்சியையும் கடைப்பிடிக்க வேண்டும். உங்கள் முயற்சிகளுக்கு வெகுமதி கிடைக்கும்.

சிம்மம்

உறவில் உங்கள் தனித்துவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். இன்று நீங்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு அனுபவத்தையும் ரசித்து மகிழுங்கள். வேலை செய்யும் இடத்தில் ஈகோவை விட்டுவிட்டு. பிறருடன் ஒற்றுமையையாக இருக்க நினைவில் கொள்ளுங்கள். உங்களின் புதிய வணிக முயற்சிக்கு ஆதரவு கிடைக்கும்.

கன்னி

உங்கள் உறவில் நீங்கள் இன்று அன்பான மற்றும் நட்பு அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும். புதிய அனுபவங்களை நீங்கள் பெற கூடிய நாளாக இருக்கலாம். உங்கள் வாழ்க்கையில் இன்று நீங்கள் சவால்களை எதிர்கொள்ள நேரிடலாம். தைரியமாக அவற்றை எதிர்கொண்டால் உங்கள் வாழ்வின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

துலாம்

இன்று உங்கள் உறவில் ஏதேனும் எதிர்பார்ப்புகள் இருந்தால் அது நிறைவேறும். தம்பதியருக்குள் பாசம் மற்றும் அன்பு அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் மற்றும் சாதிக்கும் நாளாக இருக்கும். உங்கள் திறன்களை வெளிப்படுத்தும் முயற்சிகளை இன்று செய்வது பலனளிக்கும்.

விருச்சிகம்

இன்று உங்களது உறவுகளுக்குள் தேவையற்ற மோதல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பொறுமை மற்றும் நிதானத்தை கடைபிடிக்கவும். உங்கள் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்புகள் இன்று இருக்கலாம். உங்களது நேர்மறை செயல்கள் புதிய வாய்ப்புகளை பெற்று தரும்.

தனுசு

உங்கள் உறவில் ஆழ்ந்த நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு உணர்வு அதிகரிக்கும். இதயப்பூர்வமான விஷயங்களில் புதிய அனுபவங்களை பெறுவீர்கள். பணியிடத்தில் உங்கள் சக ஊழியர்களின் உணர்ச்சிகள் மற்றும் போராட்டங்களை நீங்கள் புரிந்து கொள்ளவும் வேண்டும். உங்களின் புதிய முயற்சியில் சாதனைகள் மற்றும் முன்னேற்றம் கிடைக்க கூடும்.

மகரம்

இன்று உங்கள் உறவில் கவனமாகவும் இருக்க வேண்டும், உங்கள் துணையைப் பற்றிய ஆழமான புரிதலை வளர்த்து கொள்வதில் கவனம் செலுத்துங்கள். உங்களது நீண்ட நாள் முயற்சிகள் இன்று வெற்றி பெறும். உங்களது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

கும்பம்

உங்கள் உறவில் அமைதி மற்றும் மகிழ்ச்சையை ஏற்படுத்த இன்று முயற்சிக்க வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ நீங்கள் நிதானம் மற்றும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான விஷயங்களை செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மீனம்

உங்கள் உறவில் மகிழ்ச்சி மற்றும் உற்சாகம் இருக்கும் மற்றும் அன்பு அதிகரிக்கும். உங்கள் திறன்கள் மீது நம்பிக்கை வைத்து, உங்கள் வாழ்க்கை பாதையை தீர்மானிக்கும் வாய்ப்புகளை தேடுங்கள். வியாபாரிகளுக்கு தொழிலில் இன்று புதிய வாய்ப்புகள் வரும் என்பதால் திருப்புமுனை ஏற்பட கூடும்.

Related Posts

Leave a Comment