பிக்பாஸ் வரலாற்றில் முதன்முறையாக விசித்ராவுக்கு வழங்கப்பட்ட ஸ்பெஷல் விருது..!

by Lifestyle Editor

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள விசித்ராவுக்கு இதுவரை எந்த சீசனிலும் கிடைக்காத ஒரு விருது கிடைத்திருக்கிறது.

பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இந்நிகழ்ச்சி இதுவரை தமிழில் 6 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது 7-வது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஒரு மாதமே எஞ்சி உள்ளதால் போட்டியாளர்களுக்கு இடையே டைட்டிலை தட்டிதூக்குவதற்கான போட்டியும் கடுமையாகி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்த ஒரு டாஸ்க் என்றால் அது ஃப்ரீஸ் டாஸ்க் தான். இந்த டாஸ்க் இறுதிக்கட்டத்தில் தான் நடத்தப்படும். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் இந்த வாரம் முழுவதும் ஃபிரீஸ் டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது. இந்த டாஸ்க்கின் போது போட்டியாளர்களின் குடும்பத்தார் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வார்கள்.

அதன்படி நேற்று ஒரே நேரத்தில் சரவண விக்ரம், விஜய் வர்மா, பூர்ணிமா மற்றும் அர்ச்சனா ஆகியோரின் பெற்றோர் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றிருந்தனர். இதனால் பிக்பாஸ் வீடே பாச மழையில் நனைந்தது. கெஸ்ட் ஆக வந்திருந்த போட்டியாளர்களின் பெற்றோரையும் டாஸ்க் விளையாட வைத்து அழகுபார்த்தார் பிக்பாஸ். இதுமட்டுமின்றி, அவர்கள் அனைவரையும் தனியாக அழைத்து உங்களுக்கு பிடித்த ஒரு போட்டியாளரை முடிவு செய்து அவருக்கு விருது கொடுக்க சொன்னார் பிக்பாஸ்.

இதையடுத்து அனைவரும் கலந்து பேசி ஒருமனதாக விசித்ராவை தேர்வு செய்தனர். அவர் தான் இந்த வீட்டில் வயதான போட்டியாளர் என்பதாலும் யாரேனும் ஒரு போட்டியாளர் சோர்ந்துபோய் இருந்தால் ஒரு அம்மாவாக சென்று அவரை அரவணைத்து அன்பாக பார்த்துக் கொள்வதாகவும் கூறி விசித்ராவுக்கு இந்த விருதை வழங்கினர். இந்த விருதை பெற்றுக்கொண்ட விசித்ரா, தான் டைட்டில் ஜெயித்தால் கூட இவ்வளவு சந்தோஷப்பட்டிருக்க மாட்டேன். இது அதைவிட பெருசு என நெகிழ்ந்து பேசினார். பிக்பாஸ் வரலாற்றில் இப்படி ஒரு விருதை பெறும் முதல் போட்டியாளர் விசித்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment